தென் ஆப்பிரிக்காவின் மிகச்சிறந்த முன்னாள் பேட்ஸ்மென் பேரி ரிச்சர்ட்ஸ், ஆட்டத்தின் போது பந்தை சேதப்படுத்துவதை அதிகாரபூர்வமாக அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் பந்துவீச்சாளர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும், ஆட்டம் மொத்தமாக பேட்ஸ்மென்களுக்குச் சாதகமாக அமையாது என்ற நோக்கத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
"எனக்குத் தேவையானது பவுலர்-பேட்ஸ்மென்களுக்கு 50-50 வாய்ப்புகள் இருக்க வேண்டும் என்பதே. இப்போது இருக்கும் நிலை நீடித்தால் வரும் இளைஞர்கள், கிரிக்கெட் ஆடும் குழந்தைகள் பேட்ஸ்மெனாவதையே விரும்புவர். பவுலர்களே இல்லாமல் போய், கிரிக்கெட் மெல்ல அழியும்.
ரிவர்ஸ் ஸ்விங் என்பது ஒரு கலை. தேவைப்பட்டால் பவுலர்கள் பந்தை தரையில் தேய்த்துப் பயன்படுத்துவதை அனுமதிக்க வேண்டும், ஏனெனில் அனைத்து பவுலர்களும் ரிவர்ஸ் ஸ்விங் வீசப்போவதில்லை.
மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் நல்ல பவுலர்கள், சிறந்த பவுலர்களை 20 ஓவர்கள் வரை வீச அனுமதி அளிக்கலாம். ஆனால், ஆட்டம் தொடங்கும் முன்பு 2 பவுலர்களைக் குறிப்பிட வேண்டும்.
அதே போல் பேட்டில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும், மட்டையின் விளிம்பு அடர்த்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவேண்டும்.
அதே போல் தற்போதுள்ள லெக்-திசை பீல்டிங் விதியை கொஞ்சம் மாற்றலாம். இதெல்லாம் எனது யோசனைகள், ஏனெனில் பேட்ஸ்மென்களுக்கு தற்போதெல்லாம் மிகவும் சுலபமாக இருந்து வருகிறது.” என்றார் பேரி ரிச்சர்ட்ஸ்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago