மூத்த வீரர்களின் செயல்பாட்டில் அதிருப்தி: ராஜினாமா செய்யப் போவதாக பாக். பீல்டிங் பயிற்சியாளர் மிரட்டல்

By பிடிஐ

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்கள் 3 பேரின் மோசமான செயல்பாட்டால் கடும் அதிருப்தி அடைந்துள்ள அந்த அணியின் பீல்டிங் பயிற்சியாளர் கிரான்ட் லுடேன் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டல் விடுத் துள்ளார்.

உலகக் கோப்பையில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மூத்த வீரர்களான ஷாகித் அப்ரிதி, அஹமது ஷெஸாத், உமர் அக்மல் ஆகியோர் கிரான்ட் லுடேனுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் மோசமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து கடும் கோபமடைந்த லுடேன், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சஹாரியார் கானிடம் புகார் அளித்துள்ளார். அதில், “என்னை அவமதிக்கும் வகையில் வீரர்கள் மோசமாக நடந்து கொள்வதை பொறுத்துக் கொள்ள முடியாது. எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்.

சம்பந்தப்பட்ட வீரர்கள் தனக்கு ஒத்துழைப்பு அளிக்காததோடு, தனது பணியை செய்யவிடாமல் தடுக்கின்றனர். தவறான வார்த்தைகளை உபயோகிக் கிறார்கள். எனவே வீரர்கள் தங்களின் நடத்தையை மாற்றிக் கொள்ளா விட்டால் நான் எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்“ என குறிப்பிட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

எனினும் அதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதேநேரத் தில் இது தொடர்பாக அணி மேலாளர் நவீத் சீமா, தலைமைப் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகியோருடன் சஹாரியார் கான் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படு கிறது.

மேலும், லுடேனின் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதா கவும், எதிர்காலத்தில் வீரர்கள் இது போன்ற நடந்துகொள்ள அனுமதிக்கப் படமாட்டார்கள் என்றும் சஹாரி யார் கான், லுடேனிடம் உறுதியளித் துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்