ஜூரிச் செஸ்: ஆனந்த் சாம்பியன்

By பிடிஐ

ஜூரிச் செஸ் கிளாசிக் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் ரவுண்டு ராபின் முறையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி சுற்றில் ரஷ்யாவின் செர்ஜி கர்ஜாகினை எதிர்கொண்டார் ஆனந்த்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 42-வது நகர்த்தலின் முடிவில் டிராவானது. இதையடுத்து 2 வெற்றி, 3 டிரா என மொத்தம் 7 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் ஆனார் ஆனந்த்.

கிரென்கே கிளாசிக் போட்டியில் தோல்வியடைந்த ஆனந்துக்கு, ஜூரிச் போட்டியில் கிடைத்த வெற்றி மிக முக்கியமானதாகும். இதன்மூலம் அவருடைய தரவரிசை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்மேனியாவின் லெவோன் ஆரோனியனுடன் டிரா செய்த அமெரிக்காவின் ஹிகாரு நாகமுரா 2-வது இடத்தைப் பிடித்தார். இதேபோல் விளாடிமிர் கிராம்னிக்-இத்தாலியின் ஃபாபியானோ கருணா இடையிலான ஆட்டமும் டிராவில் முடிந்தது.

கிராம்னிக் 3-வது இடத்தைப் பிடித்தார். ஆரோனியன், கருணா, கர்ஜாகின் ஆகியோர் 4-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

மேலும்