கடந்த 6 மாதங்களாக பாகிஸ்தான் நன்றாகவே விளையாடி வருகிறது: ஷேன் வார்ன்

By பிடிஐ

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் அனுபவமிக்க, மூத்த வீரர்கள் எழுச்சி பெறவேண்டும் என்பது அவசியம் என்கிறார் ஆஸி. அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன்.

டூரிசம் விக்டோரியா நடத்திய நிகழ்ச்சியின் போது பிடிஐ செய்தியாளரிடம் ஷேன் வார்ன் கூறும்போது, “அவர்கள் ஒரு அணியாக இன்னமும் ‘கிளிக்’ ஆகவில்லை. உலகக்கோப்பை போன்ற முக்கியத் தொடர்களில் இந்திய அணியின் மூத்த வீரர்களும், முக்கிய வீரர்களும் எழுச்சி பெறுவது அவசியம்.

இந்திய அணி பெரிய ஃபார்மில் இல்லை. 3 மாதங்களாக அவர்கள் ஆஸ்திரேலியாவில் இருந்தாலும், அன்று கடைசியாகவே ஒரு வெற்றியை (ஆப்கானிஸ்தானுக்கு எதிராக) பெற்றனர்.

இந்திய அணியில் சில மூத்த வீரர்கள் உள்ளனர், ஆனால் நிறைய அனுபவமற்ற வீரர்களும் இருக்கின்றனர். பாகிஸ்தானைப் பொறுத்தவரை கவலையில்லை, கடந்த 6 மாதங்களாக அந்த அணி நல்ல கிரிக்கெட்டை ஆடி வருகின்றனர்.

இது ஒரு மிகப்பெரிய போட்டி, டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த போட்டி. இந்த வார இறுதி என்ன அருமையான வார இறுதி! சனிக்கிழமை ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதல் பிறகு ஞாயிறன்று இந்தியா-பாக். மோதல். உலகக்கோப்பை கிரிக்கெட்டிற்கு அருமையான தொடக்கம்.” என்றார் வார்ன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்