உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெலிங்டனில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்தும், இங்கிலாந்தும் மோதுகின்றன.
முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ள பிரென்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூஸிலாந்து, இந்த ஆட்டத்திலும் வென்று ஹாட்ரிக் வெற்றியைப் பெறும் முனைப்பில் களமிறங்குகிறது. ஆனால் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியோ முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலி
யாவிடம் படுதோல்வி கண்ட நிலை யில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தோல்வியிலிருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனினும் நல்ல பார்மில் இருக்கும் நியூஸிலாந்து அணியை வீழ்த்த இங்கிலாந்து கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.
வலுவான நியூஸி.
நியூஸிலாந்து அணியைப் பொறுத்த வரையில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என எல்லா துறைகளிலும் வலுவான அணியாக உள்ளது. கேப்டன் மெக்கல்லம், கப்டில், டெய்லர், ரோஞ்சி போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர். கோரே ஆண்டர்சன், வில்லியம்சன் ஆகியோர் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்தி வருகின்றனர்.
வேகப் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் டிம் சவுதி, டிரென்ட் போல்ட், மில்னி, ஆண்டர்சன் ஆகியோரும், சுழற்பந்து வீச்சில் வெட்டோரி, வில்லியம்சன் ஆகியோரும் இங்கிலாந்து அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தடுமாறும் இங்கிலாந்து
இங்கிலாந்து அணியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் முன்னணி வீரர்கள் இருந்தபோதிலும், அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எதிர்பார்த்த அளவுக்கு ஆடவில்லை. எனினும் அந்த அணியின் கேப்டன் இயோன் மோர்கன், முதல் ஆட்டத்தில் கண்ட தோல்வியை நினைத்து அச்சம் கொள்ள வேண்டாம் என தனது அணியினருக்கு அறிவுரை கூறியுள்ளார்.
பேட்டிங்கைப் பொறுத்தவரையில் இயான் பெல், ஜேம்ஸ் டெய்லர், கேப்டன் மோர்கன், கேரி பேலன்ஸ், ஜோ ரூட், ஜோஸ் பட்லர் ஆகியோர் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே இங்கிலாந்து அணியின் ரன் குவிப்பு அமையும். கேப்டன் மோர்கன் இதுவரை பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. அதனால் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் அவர் உள்ளார்.
ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ், ஸ்டீவன் ஃபின் போன்ற முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தபோதிலும் அவர்களால் ஆஸ்திரேலிய அணியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதேபோல் கடைசிக் கட்ட ஓவர்களை சிறப்பாக வீசாமல் ரன்களை வாரி வழங்கி வருவது அந்த அணியின் மிகப்பெரிய பலவீனமாக உள்ளது.
உலகக் கோப்பையில் இதுவரை…
உலகக் கோப்பையில் இதுவரை இந்த இரு அணிகளும் 7 முறை மோதியுள்ளன. அதில் முதல் 3 போட்டிகளில் இங்கிலாந்தும், கடைசி 4 போட்டிகளில் நியூஸிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago