முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளது.
கடந்த உலகக்கோப்பை சாம்பியன் இந்தியாவைக்காட்டிலும் 6 புள்ளிகளும், தென் ஆப்பிரிக்காவைக் காட்டிலும் 7 புள்ளிகளும் ஆஸ்திரேலியா அதிகம் பெற்றுள்ளது.
இறுதிப் போட்டியில் பொறுப்புடன் விளையாடி 95 ரன்களையும் பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ஆஸி. ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் பேட்டிங் தரவரிசையில் 19 இடங்கள் தாவி தரவரிசையில் 17-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்திய பேட்ஸ்மென்களில் விராட் கோலி, ஷிகர் தவன் ஆகியோர் ஒரு இடம் பின்னடைவு கண்டு முறையே 3-வது மற்றும் 7-வது இடத்தில் உள்ளனர். ஆனால், தோனி ஒரு இடம் முன்னேறி 8ஆம் இடத்தில் உள்ளார்.
ஏ.பி. டிவிலியர்ஸ், ஹஷிம் ஆம்லா முதல் இரண்டு இடங்களில் இருக்க நியூசி.யின் புதிய நட்சத்திரம் கேன் வில்லியம்ன்சன் 4 இடங்கள் முன்னேறி 6-ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
முத்தரப்பு ஒருநாள் தொடரில் அதிகபட்சமாக 12 விக்கெட்டுகளைச் சாய்த்த மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சு தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறி 7-ஆம் இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளார். 3 விக்கெட்டுகளை நேற்றைய இறுதிப் போட்டியில் கைப்பற்றிய மிட்செல் ஜான்சன் 5-ஆம் இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 இடங்கள் முன்னேறி 4-ஆம் இடத்திலும், த்ரோ செய்ததாக தடை செய்யப்பட்டு பந்துவீச்சை சீர்திருத்தும் நடைமுறையில் இருந்து வரும் சயீத் அஜ்மல் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறார். அடுத்த இடத்தில் த்ரோவை சரி செய்து கொண்டிருக்கும் சுனில் நரைன் உள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago