சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் தோல்வி கண்டார்.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் ஸ்ரீகாந்த் 19-21, 18-21 என்ற நேர் செட்களில் உலகின் முதல் நிலை வீரரான மலேசியாவின் லீ சாங் வெய்யிடம் தோல்வி கண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே லீ சாங்குக்கு நிகராக விளையாடினார் ஸ்ரீகாந்த். முதல் செட்டில் ஒரு கட்டத்தில் 15-16 என்ற நிலையில் இருந்த ஸ்ரீகாந்த் பின்னர் 19-16 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதனால் முதல் செட்டை ஸ்ரீகாந்த் கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடும் நெருக்கடிக்கு மத்தியில் விளையாடிய அவர் 4 “அன்போர்ஸ்டு” தவறுகளை செய்து முதல் செட்டை 19-21 என்ற கணக்கில் லீ சாங்கிடம் இழந்தார்.
முதல் செட்டை கைப்பற்றிய லீ சாங், அடுத்த செட்டில் எவ்வித நெருக்கடியுமின்றி விளையாடினார். இதனால் அவர் ஒரு கட்டத்தில் 15-8 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதன்பிறகு அவர் 19-12 என்ற முன்னிலையை எட்டியபோதும், ஸ்ரீகாந்த் தொடர்ந்து போராடினார். அடுத்த 7 கேம்களில் 6-ஐ வென்ற ஸ்ரீகாந்த் 18-20 என்ற நிலைக்கு வந்தார். எனினும் ஸ்ரீகாந்தால் தோல்வியிலிருந்து தப்ப முடியவில்லை.
இன்று நடைபெறும் இறுதிச் சுற்றில் இந்தோனேசியாவின் சைமன் சன்டோஸாவை சந்திக்கிறார் லீ சாங். சன்டோஸா தனது அரையிறுதியில் 16-21, 21-17, 21-17 என்ற செட் கணக்கில் சீனாவின் பெங்கு டூவை தோற்கடித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago