மிஸ்பா ஒரு கோழை, சுயநலமி: பாக். தோல்வியை அடுத்து ஷோயப் அக்தர்

By பிடிஐ

மே.இ.தீவுகளுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இன்று படுதோல்வியடைந்ததையடுத்து முன்னாள் பாக். வீரர்கள் அந்த அணியின் மீதும் கேப்டன் மிஸ்பா மீதும் கடும் விமர்சனங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

ஜியோ நியூஸ் சானலில் ஷோயப் அக்தர் கூறும்போது, “அதாவது அழிவை நோக்கி நம் அணி சென்று கொண்டிருக்கிறது என்று நான் நீண்ட நாட்களாகக் கூறிவருகிறேன். மிஸ்பா உல் ஹக் போல் ஒரு சுயநலம் மிக்க கோழையான ஒரு கேப்டனை நான் என் வாழ்நாளில் கண்டதில்லை.

அணிக்கு உத்வேகம் மிக்க ஒரு தலைவர் தேவை என்ற நிலையில் 3ஆம் நிலையில் மிஸ்பா களமிறங்கி யூனிஸ் கான் போன்ற வீரர்களைப் பாதுகாத்திருக்க வேண்டும். மிஸ்பா எப்போதும் ஒரு சுயநலமியே. தான் எவ்வளவு ரன்கள் எடுக்கிறோம் என்பதுதான் அவருக்கு முக்கியம், அணி இரண்டாம்பட்சம்தான்.

முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் சக்லைன் முஷ்டாக் கூறுகையில், “ஒட்டு மொத்த தேசமும் கோபமாக உள்ளது. ஒரு தொழில்பூர்வ நிர்வாகத்திடமிருந்து இத்தகைய தொழில்பூர்வமற்ற முடிவுகள் வருவது ஆச்சரியமே.

முன்னாள் வீரர் முகமது யூசுப் கூறும்போது, “சர்பராஸ் அகமட், அல்லது லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா ஆகியோரை எப்படி உட்கார வைக்கலாம். இத்தகைய பிட்ச்களில் விளையாட தற்போதைய பாக்.வீரர்களிடத்தில் சிறந்த பேட்டிங் உத்திகள் இல்லை. இந்த இலக்கல்ல எந்த ஒரு இலக்கையுமே நம்மால் துரத்த முடியாது, இனிமேலாவது யூனிஸ் கான் ஒரு நல்ல முடிவை எடுப்பாரா?” என்று சாடினார்.

மியாண்டட் மட்டும் கொஞ்சம் ஆறுதலாக, “அணிச்சேர்க்கை சரியாக அமைந்து ஒரு வெற்றி வந்துவிட்டால் போதும், உலகக்கோப்பையில் அதன் பிறகு சரியாக விளையாடும்.” என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

மேலும்