உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணியில் அதிரடி பேட்ஸ்மேன்களான சேவாக், யுவராஜ் சிங் ஆகியோரை சேர்க்காதது மிகப்பெரிய தவறு என்று பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அப்துல் காதிர் கான் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டி:
உலகக் கோப்பையின்போது அணி வீரர்களை தேர்வு செய்வதில் ஆசிய நாடுகள் தவறு செய்வது வழக்கமாக உள்ளது. இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்களான வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங் ஆகியோர் இல்லாதது நிச்சயமாக பின்னடைவுதான்.
அவர்கள் எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி அளிக்கும் பேட்ஸ்மேன்கள். கடந்த உலகக் கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்வதற்கு அவர்களது பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. யுவராஜ் சிங் கடந்த உலகக் கோப்பையில் தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பந்து வீச்சாளராகவும் அவர் சிறப்பாக செயல்படக் கூடியவர்.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவை ஆசியாவில் இருந்து உலகக் கோப்பைக்கு சென்றுள்ளன. இவற்றில் ஏதாவது ஒரு அணிதான் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது என்பது எனது கணிப்பு.
மற்றபடி ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு அரையிறுதி வாய்ப்பு அதிகம். இந்தியா பாகிஸ் தான் போட்டி மிகவும் முக்கிய மானது. இதில் வெற்றி பெறும் அணிக்கு அடுத்த போட்டிகளில் மிகுந்த உற்சாகத்துடனும், தன்னம் பிக்கையுடன் விளையாடும் என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago