உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்கும் மேற்கிந்தியத்தீவுகள் அணியில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டியின்போது அவர் பந்து வீசும் முறை குறித்து சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அனுமதிக்கவில்லை. அதன் பிறகு பிசிசிஐ நடத்தும் போட்டிகளில் பங்கேற்பதில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள மேற்கிந்தியத்தீவுகள் அணியில் அவர் இடம் பெறவில்லை. எனினும் உலகக் கோப்பையில் விளையாடும் 15 பேர் அடங்கிய மேற்கிந்தியத்தீவுகள் அணியில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது.
அவர் தனது பந்து வீச்சு முறையை மாற்றிக் கொண்டு, விதிப்படிதான் பந்து வீசுகிறேன் என்பதை ஐசிசி-யிடம் இதுவரை நிரூபிக்கவில்லை. எனவே அவரை அணியில் இருந்து நீக்குமாறு மேற்கிந்தியத்தீவுகள் அணி நிர்வாகத்திடம் ஐசிசி கூறியுள்ளதாக தெரிகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான மேற்கிந்தியத்தீவுகள் அணியில் இடம் கிடைக்காமல் உள்ள கிரண் பொல்லார்டு அல்லது டேயன் பிராவோ, நரைனுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago