முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் : ஆஸ்திரேலியாவை இன்று மீண்டும் எதிர்கொள்கிறது இங்கிலாந்து

By செய்திப்பிரிவு

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இங்கிலாந்து இன்று மீண்டும் எதிர்கொள்கிறது.

ஏற்கெனவே இந்தியா, இங்கிலாந்து என இரு அணிகளையும் தோற்கடித்த உற்சாகத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் களமிறங்குகிறார்கள். அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிதந்த நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இருக்கின்றனர்.

ஆஸ்திரேலிய அணியில் மாற்றங்கள்

ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் இன்று இப்போட்டி நடை பெறவுள்ளது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் அந்த அணி கேப்டன் ஜார்ஜ் பெய்லி ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் இந்த போட்டியில் களமிறங்க மாட்டார். அவருக்கு பதிலாக ஸ்டீவன் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்க இருக்கிறார்.

தசைப் பிடிப்பு காரணமாக ஷேன் வாட்சன், டேவிட் வார்னர் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக கேமரூன் வொயிட், ஷான் மார்ஷ் ஆகியோர் களமிறங்க உள்ளனர்.

டேவிட் வார்னர் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதமடித்து அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

கேமரூன் வொயிட் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக களமிறங்குகிறார்.

இங்கிலாந்து அணியில்..

வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அணிக்கு திரும்பி யுள்ள இங்கிலாந்து அணியின் பலமாக அமைந்துள்ளது. அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட வில்லை. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் களமிறங்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆண்டர்சனும், ஃபின்னும் இந்திய பேட்ஸ்மேன்களை நிலை குலையச் செய்தனர். அதே பாணி யிலான பந்து வீச்சு மூலம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் களையும் அவர்கள் மிரட்ட வாய்ப் புள்ளது.

இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய பந்து வீச்சில் மிகவும் தடுமாறினர். கேப்டன் மோர்கன் மட்டுமே அப்போட்டியில் சிறப்பாக விளை யாடி சதமடித்தார். மற்ற பேட்ஸ் மேன்களால் அதிக ரன் குவிக்க முடியவல்லை. எனினும் இந்தியா வுக்கு எதிரான வெற்றி அவர்களுக்கு கூடுதல் நம்பிக்கை அளித்துள்ளது. எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து பேட்டிங் மீண்டும் சிறப்பாக அமைய வாய்ப்புள்ளது.

போட்டி நடைபெறும் ஹோபர்ட் மைதானம் ஒருநாள், இருபது ஓவர் போட்டிகளில் பேட்ஸ்மேன் களுக்கு சாதகமாகவே இருந்து வந்துள்ளது. இன்று மாலை அங்கு மழை தூரலுக்கு வாய்ப்பு உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆடுகளத்தின் தன்மை மாறலாம்.

இந்த மைதானத்தில் இதற்கு முன்பு இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் இருமுறை மோதியுள்ளன. இவை இரண்டிலுமே ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.

இன்னும்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

20 secs ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

மேலும்