நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர் குமார் சங்ககாரா இரட்டைச் சதம் எடுத்து அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளார்.
வெலிங்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 221 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி, 5 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்து மோசமான நிலைமையில் இருந்தது. சங்ககாரா 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நேற்று ஆட்டம் தொடர்ந்தபோது, 6 விக்கெட்டுக்கு சங்ககாராவுடன் ஜோடி சேர்ந்த சன்டிமல் சிறப்பாக ஆடி, 67 ரன்கள் எடுத்து நீஷம் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனாலும் சங்ககாரா அருமையாக ஆடி 301 பந்துகளில் இரட்டைச் சதமடித்தார். இது அவருடைய 11-வது இரட்டைச் சதமாகும். டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்சமாக டான் பிராட்மேன் 12 இரட்டைச் சதங்கள் எடுத்துள்ளார். வெளிநாடுகளில் இது சங்ககாராவின் 5-வது இரட்டைச் சதம்.
பின்னர், அவர் 203 ரன்களில் ஆட்டமிழக்க, இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 102.1 ஓவர்களில், 356 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பிரேஸ்வெல், நீஷம் ஆகிய பந்துவீச்சாளர்கள் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தார்கள். பிறகு தனது 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த நியூசிலாந்து அணி 2-ம் நாள் முடிவில் 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்திருந்தது
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago