மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா. 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் தொடர்ந்து 3 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது.
இருபது ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற மேற்கிந்தியத்தீவுகள் அணியால், ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாப் பிரிக்காவை வீழ்த்த முடியவில்லை.
முதல் இரு ஒருநாள் போட்டிகளிலும் மேற்கிந்தி யத்தீவுகள் தோல்வியடைந்துள்ள நிலையில் 3-வது போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத்தீவுகள் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்த ஆட்டத்திலும் அந்த அணியின் பேட்டிங் மோசமாக அமைந்தது.
தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹீர் பிலாந்தர், டேல் ஸ்டெயின், மோர்கன் ஆகியோரது பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மேற்கிந்தியத்தீவுகள் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த 33.4 ஓவர்களில் 122 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. சாமுவேல்ஸ் அதிகபட்ச மாக 26 ரன்கள் எடுத்தார்.
20 ஓவர் கிரிக்கெட்டில் அதிரடி காட்டிய கிறிஸ் கெயில்1 ரன் மட்டுமே எடுத்தார். இம்ரான் தாஹீர் அதிகபட்சமாக 4 விக்கெட் எடுத்தார். பிலாந்தர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் அடுத்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணியில் ஹசிம் ஆம்லா 61 ரன்களும் டு பெலிஸ்ஸிஸ் 51 ரன்களும் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக ரசூவ் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 24.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 124 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா சிறப்பான வெற்றி பெற்றது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago