மேற்கிந்தியத்தீவுகள் 329 ரன்களுக்கு ஆல்அவுட்: தென்னாப்பிரிக்கா 189/3

By ஏஎஃப்பி

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி, 3-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாளான நேற்று மேற்கிந்தியத் தீவுகள் அணி 99.5 ஓவர்களில் 329 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா தேநீர் இடைவேளை வரை 60 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் கேப்டவுனில் 3-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் தென்னாப்பிரிக்கா அணியில் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சைமன் ஹார்மர் சேர்க்கப்பட்டார். ஹார்மருக்கு இதுதான் முதல் டெஸ்ட் போட்டி.

டாஸ் வென்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. பிராத்வெய்ட், ஸ்மித் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினார். இருவரும் மிகவும் நிதானமாக விளையாடினர். இதனால் ரன் அதிகம் சேரவில்லை. 13.2 ஓவரில் ஸ்கோர் 30 ஆக இருந்தபோது ஸ்மித் 7 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அவரை தென்னாப்பிரிக்காவின் அறிமுக வீரர் ஹார்மர் ஆட்டமிழக்கச் செய்து, சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது முதல் விக்கெட்டை எடுத்தார்.

மேற்கிந்தியத்தீவுகள் அணியில் அதிகபட்சமாக பிளாக்வுட், ஜாண்சன் ஆகியோர் முறையே 56, 54 ரன்கள் எடுத்தனர். ஆட்டத்தின் 2-வது நாளான நேற்று அந்த அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

இதையடுத்து தென்னாப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸை தொடங் கியது. தொடக்க வீரர் எல்கர் 8 ரன்களில் ஆட்டமிழந்தாலும் மற்றொரு தொடக்க வீரர் பீட்டர்சன் 42 ரன்களை சேர்ந்து ரன் அவுட் ஆனார். அடுத்து டு பெலிஸிஸ் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தேநீர் இடைவேளையின் போது தென்னாப்பிரிக்கா 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களை எடுத்திருந்தது. கேப்டன் ஆம்லா 40 ரன்களுடனும், டிவில்லியர்ஸ் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

393 விக்கெட்டுகள் - ஸ்டெயின் சாதனை

முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா தரப்பில் ஸ்டெயின் அதிகபட்சமாக மேற்கிந்தியத்தீவுகளின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 393 விக்கெட்டுகளை அவர் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய தென்னாப்பரிக்கா வீரர்கள் பட்டியலில் மகாயா நிதினியை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். ஸ்டெயின் 146 இன்னிங்ஸில் 393 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஒரு இன்னிங்ஸில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தியது அவரது சிறப்பாகும். நிதினி 190 இன்னிங்ஸில் 390 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 37 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தியது நிதினியின் சிறப்பான பந்து வீச்சாகும்.

தென்னாப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பொல்லாக் 202 இன்னிங்ஸில் 421 விக்கெட்டுகள் வீழ்த்தி டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 87 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தியது அவரது சிறப்பான பந்து வீச்சு.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கையின் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே 708 விக்கெட்டுகளை வீழ்த்தி 2-வது இடத்திலும் உள்ளனர். இந்தியாவின் அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகள் வீழ்த்தி 3-வது இடத்திலும், கபில்தேவ் 434 விக்கெட்டுகள் வீழ்த்தி 6-வது இடத்திலும் உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்