ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஷா, லியாண்டர் பயஸ் ஜோடிகள் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் கடந்த திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. ஆடவர், மகளிர் ஒற்றையர் போட்டிகள் அன்றைய தினமே தொடங்கிவிட்ட நிலையில், இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.
இதில் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஷா சீன தைபேயின் சு வெய்-ஹெசி ஜோடி, ஆர்ஜெண்டீனா, ஸ்விட்சர்லாந்து ஜோடியான மரியா இரிகோவேன் ருமினா உபராடி ஜோடியை எதிர்கொண்டது. 48 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சானியா ஜோடி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் 6-2, 6-0 என்ற செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
அடுத்ததாக கனடாவின் கெப்பில்லா போலந்தின் அலிக்ஜா ஜோடியை சானியா ஜோடி எதிர்கொள்ள இருக்கிறது. சானியா ஜோடி மகளிர் இரட்டையர் தரவரிசையில் இப்போது 5-வது இடத்தில் உள்ளது.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் தென்னாப்பிரிக்காவின் ராவென் கலாசென்னுடன் சேர்ந்து விளையாடி வருகிறார். இந்த இணை தங்கள் முதல் சுற்றில் அமெரிக்காவின் ஸ்கூட் லிப்ஸ்கி ராஜீவ் ராம் ஜோடியை எதிர்கொண்டது. இதில் 6-4, 7-6(6) என்ற கணக்கில் பயஸ் ஜோடி வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
மகளிர் ஒற்றையர் பிரிவு
மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று 2-வது சுற்று போட்டி நடைபெற்றது. இதில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் மரியா ஷரபோவா, தரவரிசையில் 150-வது இடத்தில் உள்ள சகநாட்டு வீராங்கனை அலெக்சாண்டரா பனோவாவை எதிர்கொண்டார். இதில் ஷரபோவா எளிதில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க் கப்பட்டது. அதற்கு ஏற்ப முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் ஷரபோவா எளிதாக வென்றார்.
ஆனால் அடுத்த சுற்றில் பனோவா, ஷரபோவாவுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் சிறப்பாக விளையாடினார். எனவே அந்த செட்டை 4-6 என்ற கணக்கில் பனோவா வென்றார். இதையடுத்து 3-வது செட்டில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இந்த செட்டிலும் ஷரபோவாவுக்கு சவால் விடுக்கும் அளவுக்கு பனோவா விளையாடினார். எனினும் அந்த செட்டை 7-5 கணக்கில் ஷரபோவா போராடி கைப்பற்றி போட்டியில் வெற்றி பெற்றார்.
தகுதிச் சுற்று வீராங்கனையான பனோவா தனக்கு கடும் சவால் அளித்தது குறித்து வெற்றிக்குப் பிறகு கருத்துத் தெரிவித்த ஷரபோவா, நான் எனது முழுத்திறனையும் பயன்படுத்தி விளையாட முடியாமல்போனது. அதே நேரத்தில் பனோவா மிகச்சிறப்பாக விளையாடினார். போராடி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
முதல்நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-0 6-4 என்ற செட் கணக்கில் பெல்ஜியம் வீராங்கனை அலிசனை வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இளம் வீராங்கனைகளில் சிறப்பாக விளையாடி வரும் கனடாவின் யுஜெனி பவுச்சர்ட் 6-0, 6-3 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் கிகி பெர்டன்ஸை வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ரஷ்யாவின் மகரோவா, சீனாவின் பெங், செக்.குடியரசு வீராங்கனை கரோலினா, ருமேனியாவின் ஹெலப், இத்தாலியின் சாரா எர்ரானி உள்ளிட்டோர் மகளிர் பிரிவில் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஆடவர் பிரிவில் முன்னணி வீரர்கள் ஜோகோவிச், பெடரர், நடால் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர். 6 ம் நிலை வீரரான ஸ்காட்லாந்தின் ஆண்டி முர்ரே 2-வது சுற்றில் 6 1, 6 3, 6 2 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீரர் மரின்கோவை வீழ்த்தினார்.
செக் குடியரசின் தாமஸ் பெர்டிச் 7 6 (7 0), 6 2, 6 2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் மெல்சரை வீழ்த்தினார். பிரான்ஸின் ரிச்சர்ட், தென்னாப்பிரிக்காவின் ஆண்டர்சன், சைப்ரஸின் பகாதிஸ் ஆகியோரும் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago