என்னுடைய ஒருநாள் போட்டி சிறப்புக்கு ஐ.பி.எல் கிரிக்கெட் காரணம்: ஸ்டீவ் ஸ்மித்

By இரா.முத்துக்குமார்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மேட்ச்-வின்னராகத் தான் மாறியதற்கு ஐ.பி.எல். கிரிக்கெட் பெரும்பங்கு வகித்துள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுக்கு முன்னதாக ஸ்டீவ் ஸ்மித்தை ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் ஒரு பிரதான வீரராகக் கருதியதில்லை.

ஆனால். அணியில் தேர்வு செய்யப்பட்டவுடன் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு எதிராக தற்போது முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆகியவற்றில் ஒரு மேட்ச் வின்னராகத் திகழ்ந்து வருகிறார்.

ஆஸ்திரேலியாவின் இந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதும் அவருக்குக் கிடைத்துள்ளது.

தன்னுடைய இந்த எழுச்சிக்கு ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடியதுதான் மிகப்பெரிய காரணம் என்கிறார் அவர். அதாவது எப்போது பெரிய ஷாட்களுக்குச் செல்வது, எப்போது ஒன்று, இரண்டு என்று கட்டுப்பாடுடன் ஆடுவது என்பதை ஐபிஎல் கிரிக்கெட்டில் கற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.

“ஐபிஎல். கிரிக்கெட் ஒரு மிகப்பெரிய தொடர். அதில் விளையாடுவது மிகப்பெரிய அனுபவம். நான் இன்று இத்தகைய நிலைக்கு உயர்ந்ததில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மிகப்பெரிய பங்களிப்பு செய்தது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடும் போது நம்மைப் பற்றியே நாம் நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் திரும்பிப்பார்த்தால் நாம் மட்டையுடன் ஆடுகளத்தில் நிற்கிறோம். ஒவ்வொரு ஆட்டமும் ஒவ்வொரு வித்தியாசமான சூழ்நிலைகளை உருவாக்குகிறது.

அது எந்த ஒரு இளம் வீரருக்கும் மிகப்பெரிய கற்றுக்கொள்ளும் அனுபவம் ஆகும்.” என்றார்.

மிட்செல் ஜான்சன் டெஸ்ட் போட்டிகளில் மிகப்பெரிய பவுலராக உருவானதற்கும் ஐபிஎல் கிரிக்கெட் பங்களிப்பு செய்ததாக அவரும் சரி மற்ற ஆஸ்திரேலிய வீரர்களும் சரி கூறியதை இதனுடன் தொடர்பு படுத்திப் பார்க்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்