3 மாதங்களுக்குப் பின் சோம்தேவுக்கு வெற்றி

By செய்திப்பிரிவு

இந்திய டென்னிஸ் வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 3 மாதங்களுக்குப் பின் ஒரு வெற்றியைப் பெற்றுள்ளார்.

போர்ச்சுகல் ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ இப்டென்னை அவர் வென்றார். கடந்த 3 மாதங்களில் ஒற்றையர் பிரிவில் 5 போட்டிகளில் விளையாடிய சோம்தேவ் அனைத்திலும் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார்.

இந்நிலையில் போர்ச்சுகல் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் மேத்யூ இப்டென்னை சோம்தேவ் வென்றார். சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் சோம்தேவ் 102-வது இடத்திலும், மேத்யூ 64-வது இடத்திலும் உள்ளனர். 2-வது சுற்றில் செக். குடியரசின் தாமஸ் பெர்டிச்சை சோம்தேவ் எதிர்கொள்கிறார். தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள பெர்டிச் சோம்தேவுக்கு கடும் சவாலாக இருப்பார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்