பிசிசிஐ தேர்தலில் போட்டியிட சீனிவாசனுக்கு தடை; குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா குற்றவாளிகள்- ஐபிஎல் சூதாட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்த்ரா ஆகியோர் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

அதே நேரத்தில் என்.சீனிவாசன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், வர்த்தக நோக்கத்துடன் செயல்பட்டால் சீனிவாசன் பிசிசிஐ தேர்தலில் போட்டியிட முடியாது என்று தடை விதித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கிய சீனிவாசன், இப்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலை வராக உள்ளார். சீனிவாசனின் மருமகன்தான் குருநாத் மெய் யப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் முறைகேடுகள்

2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்டில் மேட்ச் பிக்ஸிங், சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க முகுல் முத்கல் கமிட்டியை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

அதன்படி தமது விசாரணை அறிக்கையை சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் முத்கல் கமிட்டி தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தாகூர், கலிபுல்லா ஆகி யோர் அடங்கிய அமர்வு நேற்று 130 பக்கம் அடங்கிய தீர்ப்பை வழங்கியது. அதில் கூறப்பட்டுள்ள தாவது:

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான பிசிசிஐயின் விசாரணைகளும் நடவடிக்கைகளும் சட்டத்துக்கு உட்பட்டதுதான். குருநாத் மெய் யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போதிய ஆதாரம் இல்லை

என்.சீனிவாசன் மீதான குற்றச் சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை. சூதாட்டத்தில் ஈடுபட்டவர் களை சீனிவாசன் காப்பாற்ற முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் இல்லை.

ஐபிஎல் கிரிக்கெட்டில் சீனிவாசன் உள்ளிட்டோர் வணிக நோக்கத்துடன் ஈடுபடுவதாக இருந்தால் பிசிசிஐ தேர்தலில் போட்டியிடக்கூடாது. பிசிசிஐ-யில் பதவி வகிப்பவர்கள் ஐபிஎல்-லில் வணிக நலனுக்கு சாதகமாக செயல்படும் வகையில் 2008-ம் ஆண்டு பிசிசிஐ விதிமுறைகளில் கொண்டு வரப்பட்ட திருத்தம் ரத்து செய்யப்படுகிறது.

பிசிசிஐ-யில் பதவி வகிப்பது, அதே நேரத்தில் ஐபிஎல் அணியை யும் வைத்துக் கொள்வது என இரட்டை ஆதாயம் பெறும் விதமாக நடந்து கொண்ட விவகாரத்தில் சீனிவாசனுக்கு உச்ச நீதிமன்றம் நற்சான்றிதழ் அளிக்கவில்லை. எந்த ஒரு பிசிசிஐ அதிகாரியும் வணிக நலனை பிரதானமாக கொண்டு செயல்பட முடியாது.

மறு ஆய்வு தேவையில்லை

பிசிசிஐ அமைப்பா அல்லது ஐபிஎல் போட்டியா என வரும் போது, இதில் ஏதாவது ஒன்றை சீனிவாசன் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். முத்கல் கமிட்டி தனது விசாரணையின்போது தமக்கு அளிக்கப்பட்ட விசாரணை வரம்பை முழுமையாக கடைபிடித்தது. அந்த விசாரணை அறிக்கையை மறு ஆய்வு செய்ய வேண்டிய தேவையில்லை. அதே நேரத்தில் ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பான விசாரணையை எப்படி நடத்தவேண்டும் என நீதிமன்றம் கூறியிருந்த வழிமுறைகளை பிசிசிஐ கடைபிடிக்கவில்லை.

இன்னும் 6 வாரத்தில் பிசிசிஐ ஆண்டு பொதுக் கூட்டத்தை நடத்த வேண்டும். தேவைப்பட்டால் பிசிசிஐ தலைவர் பதவிக்கான தேர்தலையும் நடத்த வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தண்டனை என்ன?

சூதாட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டுள்ள குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்பதையும், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய ஐபிஎல் அணிகளின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது தொடர்பாகவும் முடிவெடுக்க உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.

சரத் பவார் வரவேற்பு

தீர்ப்பு தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவரும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சரத் பவார், பிசிசிஐ செயல்பாட்டில் இருந்து சீனிவாசனை உச்ச நீதி மன்றம் விலக்கியிருப்பது மகிழ்ச்சி யளிக்கிறது என்று கூறியுள்ளார்.

முத்கல் கமிட்டிக்கு தலைமை வகித்த நீதிபதி முகுல் முத்கல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளார். இது மிகவும் முக்கியமான தீர்ப்பு என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்