ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிரிஸ்பென் சர்வதேச டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் 39 நிமிடங்களில் வென்றார் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர்.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வைல்டுகார்டு வீரர் ஜேம்ஸ் டக்வொர்தை பெடரர் நேற்று எதிர்கொண்டார். இதில் மிகவும் எளிதாக விளையாடிய பெடரர் முதல் செட்டை 6-0 என்ற கணக்கில் 16 நிமிடங்களில் வென்றார். அடுத்த செட்டில் ஜேம்ஸ் சற்று தாக்குப் பிடித்தார். 23 நிமிடங்கள் நீடித்த அந்த செட்டில் 6-1 என்ற கணக்கில் பெடரர் வென்றார்.
சர்வதேச தரவரிசையில் பெடரர் 2-வது இடத்திலும், ஜேம்ஸ் 123-வது இடத்திலும் உள்ளனர். இந்த ஆட்டத்தில் 12 ஏஸ் சர்வீஸ்களை பெடரர் செய்தார்.அரையிறுதியில் பல்கேரியாவின் கிரிகோர் திமித் ரோவை பெடரர் எதிர்கொள்ள இருக்கிறார்.
2001-ம் ஆண்டு ஷாங்காய் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் பிரான்சிஸ்கோ கிளாவெட் 25 நிமிடங்களில் 6-0, 6-0 என்ற கணக்கில் சான் ஜியாங்கை வென்றதே மிகக் குறைந்த நேரத்தில் முடிவுக்கு வந்த சர்வதேச டென்னிஸ் போட்டியாகும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago