தமிழ்நாடு-பெங்கால் இடையே நடந்த ரஞ்சி போட்டி டிராவில் முடி வடைந்துள்ளது. தினேஷ் கார்த்திக் சதம் எடுத்து தமிழக அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றினார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழ்நாடு முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுத்தது. பெங்கால் 121 ஓவர்களில், 9 விக்கெட் இழப்புக்கு 454 ரன்கள் எடுத்து தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
208 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த தமிழக அணி, 3-ம் நாள் ஆட்ட முடிவில் 20 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் ஆட்டத்தை டிரா செய்ய தமிழக அணி கடுமையாகப் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இறுதி நாளான நேற்று 117 ரன்களுக்குள் ஆஷிக் ஸ்ரீனிவாஸ், பரத் சங்கரின் விக்கெட்டுகளை தமிழகம் இழந்தது. அதன்பிறகு பாபா அபரஜித்துடன் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக், மிகவும் பொறுப்புடன் ஆடி அணியை சரிவி லிருந்து காப்பாற்றினார். இந்த ஜோடி 36.2 ஓவர்கள் ஆடி 103 ரன்கள் சேர்த்தது. அபரஜித் 68 ரன்களில் டிண்டாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு ஆடவந்த இந்திரஜித் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு எந்த ஒரு விக்கெட்டை யும் தமிழக அணி இழக்கவில்லை. 5 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் டிரா ஆனது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தினேஷ் கார்த்திக் 103 ரன்கள் எடுத்தார்.
சுருக்கமான ஸ்கோர்
முதல் இன்னிங்ஸ்:
தமிழ்நாடு 246 (தினேஷ் கார்த்திக் 92, பிரசன்னா 50, டிண்டா 4வி/76)
பெங்கால் 454/9 டிக்ளேர் (ஈஸ்வரன் 150, மனோஜ் திவாரி 97, நடராஜன் 3வி/92)
இரண்டாவது இன்னிங்ஸ்:
தமிழ்நாடு 327/5 (தினேஷ் கார்த்திக் 103, அபரஜித் 68, பரத் சங்கர் 58, டிண்டா 2வி/81)
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago