6 மாநில பல்கலைக்கழகங்கள் பங்கேற்கும் ஹாக்கி - கோவில்பட்டியில் தொடங்கியது

By செய்திப்பிரிவு

சென்னை அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் தென்மண்டல பல் கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆண்கள் ஹாக்கி போட்டி , தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் நேற்று தொடங்கியது.

கோவில்பட்டி நேஷனல் பொறி யியல் கல்லூரி விளையாட்டுத் திடலில் நேற்று காலை தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் எஸ்.சண்முகவேல் தொடங்கி வைத்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு வாரிய செயலாளர் சுந்தரராஜன் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங் கானா ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த 52 பல்கலைக்கழகங்களின் அணிகள் கலந்து கொண்டுள்ளன. முதல் போட்டியில் ஹைதராபாத் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழக அணி 3-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு கிறிஸ்ட் பல்கலைக்கழக அணியை வென்றது.

தொடர்ந்து பெங்களூரு ராஜீவ்காந்தி பல்கலைக்கழக அணி 5- 0 என்ற கோல் கணக்கில் கோவை விவேகானந்தா பல்கலைக்கழக அணியையும், ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக அணி 5-1 என்ற கோல் கணக்கில் கர்நாடகா பல்கலைக்கழக அணியையும் வென்றன.

இதன் தொடர்ச்சியாக பிற்பக லில் நடைபெற்ற ஆட்டங்களில் மங்களூர் பல்கலைக்கழக அணி 5-4 என்ற கோல் கணக்கில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி யையும், ஸ்ரீகுளம் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் பல்கலைக்கழக அணி 4-0 என்ற கோல் கணக்கில் கர்நாடகம் தவாங்கேரே பல்கலைக்கழக அணியையும், வாராங்கல் ககாட்டியா பல்கலைக்கழக அணி 3- 1 என்ற கோல் கணக்கில் கேரளம் கண்ணணூர் பல்கலைக்கழக அணியையும் வென்றன.

இப்போட்டிகள் வரும் 26-ம் தேதி வரை நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம், முதல்வர் சண்முகவேல், அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு வாரிய செயலாளர் சுந்தரராஜன், உடற்கல்வி இயக்குநர்கள் ரகு, கீதா மற்றும் மாணவர்கள் செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்