நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அங்கு 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இன்று வெலிங்டனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற பிரெண்டன் மெக்கல்லம் பாகிஸ்தானை பேட் செய்ய அழைத்தார். கைல் மில்ஸ், போல்ட், அதிவேக வீச்சாளர் மில்ன ஆகியோர் மிகச்சிறப்பாக வீசியதோடு நியூசிலாந்தின் பீல்டிங் அதி அற்புதமாக அமைந்தது. “இந்த சீசனில் இது போன்று பீல்டிங் செய்ததில்லை” என்று பிற்பாடு பிரெண்டன் மெக்கல்லம் பாராட்டியுள்ளார். பாகிஸ்தான் 45.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து 39.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஏற்கெனவே நியூசிலாந்திடம் ஒருநாள் தொடரை துணைக்கண்டத்தில் இதற்கு சற்று முன்னர் 2-3 என்று இழந்த பாகிஸ்தான் சரியான தயாரிப்பில் இல்லை என்பது தெரிந்தது. மேலும் நியூசிலாந்து அணி இலங்கையை 4-2 என்று வெற்றி பெற்று அதிரடி ஃபார்மில் உள்ளது.
இன்னிங்ஸ் தொடங்கியவுடன் கைல் மில்ஸ் வீசிய முதல் ஓவரில் மொகமது ஹபீஸ் பவுல்டு ஆனார். மில்ஸின் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆனதால் பாகிஸ்தான் திணறியது மேலும் மில்ஸ் யூனிஸ் கான் விக்கெட்டையும் கைப்பற்றினார்.
டிரெண்ட் போல்ட், அகமது ஷெஜாத் (15) விக்கெட்டை வீழ்த்தினார். ஷேஜாத் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பிறகு ஹாரிஸ் சொஹைல் (23), உமர் அக்மல் (13), சர்பராஸ் அகமட் (5) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். 36-வது ஓவரில் பாகிஸ்தான் 127/6 என்று ஆனது.
மிஸ்பா நிற்க, அப்ரீடி தாண்டவம்:
127/6 என்ற நிலையில் மிஸ்பா உல் ஹக் 74 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர் சகிதம் 52 ரன்கள் எடுத்து விளையாடி வந்தார். அப்ரீடி 1 பவுண்டரியுடன் 6 ரன்களில் இருந்தார்.
முதலில் மில்னவின் பந்தை 2 அபார பவுண்டரிகளை அடித்தார் அப்ரீடி. ஆனால் அதற்கு அடுத்த ஓவரில் ஆண்டர்சன் வீசிய ஒரு பந்தை மிட் ஆனை நோக்கி தூக்கி அடிக்க முயன்றார் அப்ரீடி, ஆனால் பந்து டாப் எட்ஜ் ஆகி மேலெழும்பியது. மெக்கல்லம் அதனை பின்னால் ஓடிச் சென்று பிடிக்க முயன்று கோட்டை விட்டார். அதில் 2 ரன்கள். பிறகு அடுத்த பந்து ஆண்டர்சன் வீசிய மெதுபந்து ஸ்கொயர் லெக் திசையில் சிக்சர் ஆனது. 39-வது ஓவரில் மீண்டும் மில்ன பந்தை 2 பவுண்டரிகள் விளாசினார் அப்ரீடி, அடுத்த ஆண்டர்சன் ஓவரில் மீண்டும் இரண்டு அபார பவுண்டரிகள்.
பிறகு நேதன் மெக்கல்லம் விச வந்தவுடன், நேராக மேலேறி வந்து சிக்சர் விளாசினார். பிறகு ஒரு காலை மடக்கிக் கொண்டு கவர் திசையில் மீண்டும் ஒரு பூம் பூம் அப்ரீடி ஷாட் பந்து சிக்சர் செல்ல 21 பந்துகளில் அரைசதம் எட்டினார் அப்ரீடி.
மிஸ்பா உல் ஹக் இந்த ஜோடி சேர்ப்பில் ஒற்றை இலக்க பங்களிப்பையே செய்ய முடிந்தது. அவர் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் இணைந்து 7-வது விக்கெட்டுக்காக 8 ஓவர்களில் 71 ரன்கள் சேர்த்தனர்.
அதன் பிறகு மீண்டும் சரிவடைய. அப்ரீடி 29 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 67 ரன்கள் எடுத்து 9வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். நியூசி. தரப்பில் கிராண்ட் எலியட் 3 விக்கெட்டுகளையும், மில்ஸ், போல்ட், ஆண்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற பாகிஸ்தான் 210 ரன்களில் சுருண்டது.
நியூசி. அணியின் அனாயசமான துரத்தல்:
7 அடி உயர மொகமது இர்பார்ன், பிலாவல் பட்டி, ஈசான் அடில் ஆகியோர் எந்த வித இலக்குமில்லாமல் வீசினர். மெக்கல்லம் 17 ரன்களை 12 பந்துகளில் அடித்துவெளியேறினார். டாம் லோதம் 23 ரன்களையும், மார்டின் கப்தில் 39 ரன்களையும் எடுத்தனர். நியூசிலாந்து 18 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்தது. பாகிஸ்தானோ 29-வது ஓவரில்தான் 100 ரன்களைக் கடந்தது.
அதன் பிறகு கிராண்ட் எலியட் (64 ரன்கள் 68 பந்து 8 பவுண்டரி), ராஸ் டெய்லர் (59) ஆகியோர் இணைந்து 4-வது விக்கெட்டுக்காக மிக அனாயசமாக 112 ரன்களை 21 ஓவர்களில் சேர்க்க நியூசிலாந்து 39.3 ஓவர்களில் 213/3 என்று வெற்றி பெற்றது. அப்ரீடி பந்து வீச்சிலும் சிக்கனம் காட்டி 39 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக கிராண்ட் எலியட் தேர்வு செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago