இதுவரை 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், விரைவில் தொடங்கவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியிலும் வென்று 18-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விம்பிள்டன், யுஎஸ் ஓபன், பிரெஞ்சு ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் ஆகிய 4 டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளும் கிராண்ட்ஸ்லாம் என்ற சிறப்பு பெயரில் அழைக்கப்படுகின்றன. இதில் விம்பிள்டனில் 7 முறையும், யுஎஸ் ஓபனில் 5 முறையும், ஆஸ்திரேலிய ஓபனில் 4 முறையும், பிரெஞ்சு ஓபனில் ஒருமுறையும் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக அவர் கூறியது: 33 வயதிலும் நான் முழு உடல் தகுதியுடன் இருக்கிறேன். எனது டென்னிஸ் வாழ்க்கையில் இந்த புத்தாண்டை வெற்றிகரமானதாக்கிக் கொள்ள விரும்புகிறேன். இதுவரை 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளேன். இனி அடுத்ததாக ஆஸ்திரேலிய ஓபனிலும் வென்று 18-வது கிராண்ட்ஸ்லாம் வெற்றியை பதிவு செய்ய ஆவலுடன் இருக்கிறேன் என்றார். சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ரோஜர் பெடரர் இப்போது 2-வது இடத்தில் உள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago