சிட்னியில் நடைபெற்று வரும் கார்ல்டன் முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட் செய்து இங்கிலாந்து 50 ஓவர்களில் 234 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் 121 ரன்கள் எடுத்ததனால் மரியாதைக்குரிய ஒரு ரன் எண்ணிக்கையை எட்ட முடிந்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு ஜார்ஜ் பெய்லி கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
டாஸ் வென்று பேட்டிங் என்றவுடன் முதல் பந்தில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் பந்து அபாரமான இன்ஸ்விங்கராக அமைய நிலைகுலைந்த இயன் பெல் கால்காப்பில் வாங்கினார். நடுவர் கையை உயர்த்தினார்.
அதே ஓவரின் 3-வது பந்தில் ஜேம்ஸ் டெய்லர், இயன் பெல்லுக்கு வீசப்பட்ட அதே பந்தில் நேராக வாங்கி 0-வில் அவுட் ஆனார். 3 பந்துகளில் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளைச் சாய்க்க அதிர்ச்சியடைந்தது இங்கிலாந்து.
ஜோ ரூட் ஒரு பவுண்டரி அடித்து 5 ரன்கள் எடுத்த நிலையில் டிரைவ் ஆடக்கூடிய லெந்த்தில் கமின்ஸ் வீசிய அந்தப் பந்து விழ ஜோ ரூட் டிரைவ் ஆட பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் வாட்சனிடம் கேட்ச் ஆனது. இங்கிலாந்து 12/3 என்று ஆனது.
தொடக்க வீரர் மொயீன் அலி இதற்கிடையே மிட்செல் ஸ்டார்க் வீசிய ஃபுல் லெந்த் பந்தை லெக் திசையில் பிளிக் செய்து ஒருசிக்சரையும் 2 பவுண்டரிகளையும் அடித்திருந்த மொயீன் அலி 22 ரன்கள் எடுத்து டீப் எக்ஸ்ட்ரா கவரில் அவருக்கென்றே நிறுத்தப்பட்ட மேக்ஸ்வெல் கையில் குறிபார்த்து அடித்தார். பாக்னர் அப்படி அடிக்குமாறு வீசினார். இப்படி, பொறியில் சிக்கி மொயீன் அலியும் வீழ்ந்தார்.
அதன் பிறகு பொபாரா, மோர்கன் இணைந்து ஸ்கோரை 69 ரன்களுக்கு உயர்த்தினர். பொபாரா 13 ரன்கள் எடுத்த நிலையில் இடது கை ஸ்பின் பவுலர் டோஹெர்ட்டியின் பந்தை கட் செய்ய முயன்று பேக்வர்ட் பாயிண்டில் நேராக கேட்ச் கொடுத்து வெளியேறினார். 16-வது ஓவரில் இங்கிலாந்து 69/5 என்று ஆனது.
பிறகு ஜோஸ் பட்லரும், மோர்கனும் இணைந்தனர். இருவரும் இணைந்து 19 ஓவர்களில் 67 ரன்களை மேலும் சேர்த்தனர். ஜேவியர் டோஹெர்ட்டி அபாரமான சிக்கனத்துடன் வீசி வந்தார். அவர் 10 ஓவர்களில் 38 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
ஜோஸ் பட்லர் 60 பந்துகளில் 28 ரன்களை எடுத்தார். இதில் பவுண்டரிகளே இல்லை. அவர் கடைசியில் ரன் விகிதத்தை உயர்த்துவதற்காக கவர் திசையில் தூக்கி அடித்து வார்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 136/6 என்ற நிலையில் மோர்கன் 58 ரன்களில் இருந்தார். கடைசியில் 127 பந்துகளில் மோர்கன் சதம் கண்டார். கடந்த 20 ஒருநாள் இன்னிங்ஸ்களில் அவரது முதல் சதமாகும் இது. ஒருநாள் போட்டிகளில் அவரது 6-வது சதம் இது. அடுத்த 9 பந்துகளில் மோர்கன் 21 ரன்களை எடுத்து 136 பந்துகளில் 121 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 11 பவுண்டரி 3 சிக்சர்கள் அடங்கும்.
கிறிஸ் ஜோர்டான் 17 ரன்கள் எடுக்க இங்கிலாந்து 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 48-வது ஓவரில் ஆல் அவுட் ஆனது.
ஸ்டார்க் 42 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை அதிகபட்சமாகக் கைப்பற்றினார். ஜேம்ஸ் பாக்னர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இலக்கைத் துரத்தி வரும் ஆஸ்திரேலியா தற்போது 10 ஓவர்கள் முடிவில் 55 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் 33 ரன்களுடனும், வாட்சன் 10 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago