புத்தாண்டை வெற்றியுடன் தொடங்குவேன்: மரியா ஷரபோவா நம்பிக்கை

By ஏபி

புத்தாண்டை வெற்றியுடன் தொடங்குவேன் என்று ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா கூறியுள்ளார்.

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக பிரிஸ்பேன் வந்துள்ள உலகின் 2-ம் நிலை வீராங்கனை ஷரபோவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடிப்பதுதான் புத்தாண்டில் உங்கள் இலக்கா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, களமிறங்கும் அனைத்து ஆட்டங்களிலும் கவனம் செலுத்தி சிறப்பாக விளையாட வேண்டும்.

சிறந்த வீராங்கனையாக இருக்க வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். இந்த ஆண்டை சிறப்பாகவும் வெற்றியுடனும் தொடங்க வேண்டும் என்று விரும்புகிறேன். பிரிஸ்பேனுக்கு மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது சிறந்த போட்டித் தொடர்களில் ஒன்று. புதிய சீசனில் நம்மை நன்றாக தயார்படுத்திக் கொள்வதற்கு அருமையான போட்டி என்றார்.

2012-ம் ஆண்டு நடுவில் சுமார் 4 வாரங்கள் மட்டும் டென்னிஸ் தரவரிசையில் ஷரபோவா முதலிடத்தில் இருந்தார். அதன் பிறகு அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் அந்த இடத்தைப் பிடித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்