விருப்பமிருந்தால் முதல் டெஸ்டில் ஆடலாம்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

பிலிப் ஹியூஸ் மரணத்தால் மனதளவில் பாதிப்புக்குள்ளான வீரர்கள், தங்களுக்கு விருப்ப மிருந்தால் முதல் டெஸ்டில் விளையாடலாம். விருப்பம் இல்லையென்றால் அதனால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி சுதர்லேன்ட் தெரிவித்துள்ளார்.

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 4-ம் தேதி தொடங்குவதாக இருந்த நிலையில், உள்ளூர் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸ், பவுன்சர் தாக்கியதில் மரணமடைந்தார். பிலிப் ஹியூஸின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுவதால் டெஸ்ட் தொடருக்கான தேதிகள் மாற்றப்பட்டன. முதல் டெஸ்ட் அடிலெய்டில் டிசம்பர் 9-ம் தேதி ஆரம்பமாகிறது.

இது தொடர்பாக சுதர்லேன்ட் கூறியதாவது: இதுபோன்ற இக் கட்டான நேரத்தில் வீரர்கள் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். வீரர் களுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுங்கள். அவர்கள் விருப்பப்படி முடி வெடுக்க அனுமதியுங்கள். டெஸ்ட் கிரிக்கெட் என்பது ஐந்து நாள்களும் அர்ப்பணிப்பு உணர்வோடு ஆடக்கூடியது. இந்த நேரத்தில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு உள்ள சவால்களை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

ரியான் ஹாரிஸ் சந்தேகம்

பிலிப் ஹியூஸின் மரணத்தால் மனதளவில் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸ், தான் முதல் டெஸ்டில் விளை யாடுவது சந்தேகம்தான் என தெரி வித்துள்ளார்.

டெஸ்ட் தொடரை முன்னிட்டு பிரிஸ்பேனில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஹாரிஸ் மேலும் கூறியதாவது: அடிலெய்ட் டெஸ்டில் கலந்துகொள்வது பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் சந்தேகமாக உள்ளது. பிலிப் ஹியூஸ் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட பிறகு என்ன முடிவெடுக்கப்போகிறேன் என்று பார்க்கலாம். முன்பு, என் அம்மாவை இழந்தபோது இதேபோல மனம் உடைந்தேன். என் தந்தை மற்றும் சகோதரரின் ஆதரவால் மீண்டும் கிரிக்கெட் விளையாடினேன்.

கடந்த சீஸனில் ஆடியது போல ஆடுவோம். ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் என்பது ஆக்ரோஷத்தை வெளிப் படுத்துவதாக இருப்பதால் பழையபடி ஆடுவது கொஞ்சம் கடினம்தான். பல வருடங்களாக நான் பவுன்சர்களைப் பயன் படுத்தியுள்ளேன். பவுன்சர்களால் பேட்ஸ்மேன்களை தாக்கியுள் ளேன். ஆனால் இப்போது பயிற்சி யில் 60 பந்துகளை வீசினேன். அதில் ஒன்றுகூட பவுன்சர் இல்லை. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பவுன்சர் ஒரு பகுதியாக இருக்கும். ஆனால், ஹியூஸின் மரணம், பவுன்சர் வீசுவது குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்