மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தன் 2-வது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்து 326 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இன்று காலை 462 ரன்களுடன் தொடங்கிய இந்திய அணியின் ஆட்டம் 15 பந்துகள் மட்டுமே தாங்கியது. இந்திய அணி தன் முதல் இன்னிங்ஸில் 465 ரன்களுக்குச் சுருண்டு ஆஸ்திரேலியாவுக்கு 65 ரன்கள் முன்னிலை கொடுத்தது. எதிரணியினரின் கீழ் வரிசை பேட்ஸ்மென்களை 200 ரன்களுக்கும் மேல் அடிக்க விடும் இந்திய அணி 108-வது ஓவரில் 409/3 என்ற நிலையிலிருந்து 129-வது ஓவரில் 465 ரன்களுக்குச் சுருண்டுள்ளது. 56 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் சாய்ந்தது.
இதனையடுத்து 2-வது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலியா வார்னர் மூலம் அதிரடித் தொடக்கம் கண்டது. வழக்கம் போல் பீல்டைப் புரிந்து கொள்ளாத பந்து வீச்சு, பந்து வீச்சை புரிந்து கொள்ளாத கள அமைப்பு இவற்றினால் வார்னர் 42 பந்துகளில் 6 சுலபமான பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து கடைசியில் அஸ்வினின் அபாரமான பந்து ஒன்றில் எல்.பி. ஆகி வெளியேற்றப்பட்டார். 14.2 ஓவர்களில் 57 ரன்கள் எடுக்கப்பட்டது.
வாட்சனும், ராஜர்ஸும் உணவு இடைவேளையின் போது ஸ்கோரை 90 ரன்களுக்கு உயர்த்தினர். ஆனால் 22 ஓவர்களில் 90 ரன்கள் என்பதுதான் முக்கியம்.
உணவு இடைவேளைக்குப் பிறகு மழை காரணமாக ஆட்டம் 85 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. பிறகு ஆட்டம் தொடங்கிய போது சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழத் தொடங்கின.
17 ரன்கள் எடுத்த வாட்சன் இசாந்த் சர்மாவின் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நடுவர் நோ-பாலுக்காக சரி பார்த்த தருணங்கள் இசாந்துக்கு கவலையாக அமைந்தது ஏனெனில் இந்தப் போட்டியில் அவரது முதல் விக்கெட்டாகும் இது.
பிறகு ராஜர்ஸ் தனது அரைசதத்தை எட்டினார். ஆனால், இந்த முறை அபாய பேட்ஸ்மென்/கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 14 ரன்கள் எடுத்த நிலையில் உலக கிரிக்கெட்டில் ஒரு மட்டையான ஃபிளாட் பிட்சில் லெக் ஸ்லிப் வைத்து உமேஷ் யாதவ்வை தோனி பந்து வீசச் செய்த விசித்திரம் நடந்தது. ஆனால் என்ன அதிர்ஷ்டம்! யாதவ் வீசிய மோசமான லெக் திசைப் பந்தை பிளிக் செய்ய முயன்று ரஹானேயின் அபாரமான கேட்சிற்கு ஸ்மித் வெளியேறினார்.
பவுன்ஸ் அதிகமாக இருக்கும் கீரீன் டாப் விக்கெட்டுகளில்தான் லெக் ஸ்லிப் வைக்கப்படுவதுண்டு. அல்லது ஸ்பின்னர்களுக்கு லெக் ஸ்லிப் வைக்கப்படுவதுண்டு. பவுன்ஸ் விக்கெட்டுகளில் அது கூட லெக் ஸ்லிப்பாக இருக்காது ஷாட் ஃபைன்லெக் இடத்தில்தான் பீல்டர்கள் நிறுத்தப்படுவதுண்டு அதெல்லாம் தாம்சன் போன்ற பவுலர்கள் இருந்த காலத்தில். ஹூக், புல் ஷாட்கள் சரியாக மட்டையில் சிக்கவில்லை எனில் ஷாட் பைன் லெக்கில் கேட்ச் ஆக வாய்ப்புண்டு. ஆனால் ஒரு மட்டையான பேட்டிங் பிட்சில் உமேஷ் யாதவ்வின் ஒரு சுமாரான வேகத்திற்கு லெக் ஸ்லிப்பை நிறுத்தி அதில் அதிர்ஷ்டவசமாக வெற்றியும் கண்டார் தோனி.
ஜோ பர்ன்ஸ் களமிறங்க ராஜர்ஸ் 69 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வினின் பந்து ஒன்றை இரட்டை மன நிலையில் ஆடி பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பேடில் பட்டு பவுல்டு ஆனது. தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 174/4 என்று இருந்தது.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு 9 ரன்கள் எடுத்த அறிமுக வீரர் ஜோ பர்ன்ஸ், இசாந்த் வீசிய பந்தை எட்ஜ் செய்ய தோனி அபாரமான கேட்ச் ஒன்றை பிடிக்க வெளியேறினார்.
பிராட் ஹேடின் 13 ரன்கள் எடுத்து தோனி-யாதவ் கூட்டணியின் லெக் திசை பொறிக்கு சிக்கி ஆட்டமிழந்தார். ஆனால் இம்முறை கேட்ச் பிடித்தது தோனி. நடுவர் தீர்ப்பின் மீது ஹேடினுக்கு திருப்தி இல்லை.
கடைசியாக மிட்செல் ஜான்சன் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி வீசிய எகிறும் பவுன்சருக்கு மிட்விக்கெட்டில் ரஹானேயிடம் கேட்ச் ஆனது. மீண்டும் ஜான்சன் மீது இந்திய வீரர்களின் ஏகவசனம். 5ஆம் நாள் அவர் பயங்கரமாக வீச இன்றே உத்வேகம் அளித்து விட்டார்கள் இந்திய வீரர்கள்.
234/7 என்ற நிலையில் ஹாரிஸ் களமிறங்கி 8 ரன்கள் எடுத்தார். மறு முனையில் ஷான் மார்ஷ் 62 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
இந்திய அணியில் உமேஷ் யாதவ் ஓவருக்கு 5.21 ரன்கள் வீதத்தில் விட்டுக் கொடுத்தார். மொகமது ஷமியும் ரன்களை வாரி வழங்கினார். இசாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோர் 2.6 ரன்களுக்குக் குறைவாக விட்டுக் கொடுத்து தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
மீண்டும் 176/5 என்ற நிலையிலிருந்து கடைசி 2 விக்கெட்டுகள் 85 ரன்கள் சேர்க்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்று 85 நிமிட நேர ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால், குறைவாக வீசப்பட்ட ஓவர்களை நாளை ஈடுகட்டும் விதமாக ஆட்டம் அரை மணி முன்னால் தொடங்குகிறது. அந்த அரைமணியில் ஆஸ்திரேலிய எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரன்களை அடிக்கப் பார்க்கும். எப்படியும் 375-380 ரன்களைக் கையில் வைத்துக்கொண்டு இந்திய அணியிடம் துரத்தலை விட வாய்ப்புள்ளது.
மேலும் ஒரு சுவாரசியமான நாள் காத்திருக்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago