சாதனை வெற்றியை நோக்கி இந்தியா? - தேவை 159 ரன்கள்

By கார்த்திக் கிருஷ்ணா

இந்தியா ஆஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டமான இன்று இந்தியா வெற்றி பெற ஆஸ்திரேலியா 364 ரன்களை நிர்ணயித்துள்ளது. தேநீர் இடைவேளையின் போது இந்தியா 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 205 ரன்களை எடுத்துள்ளது. இன்னும் 37 ஓவர்கள் மீதமிருக்கும் நிலையில் 159 ரன்கள் தேவை என்பதால், இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு உருவாகியுள்ளது.

முன்னதாக, நேற்றைய ஆட்டத்தை 290 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையில் ஆஸி. முடித்தது. இன்று காலை, களத்தில் இறங்காமல், முதல் இன்னிங்ஸைப் போலவே கிளார்க் டிக்ளேர் செய்தார். தொடக்க வீரர்களாக முரளி விஜய், ஷிகர் தவான் களமிறங்கினர்.

தவான் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த புஜாராவும் சிறிது நேரம் பொறுமையாக ஆடிவந்தாலும் 21 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த விராட் கோலி, முரளி விஜய் இருவரும் வெகு சிறப்பான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர்.

உணவு இடைவேளை வரை ஆட்டமிழக்காத இந்த இணை, அதற்குப் பின்னும் ஆஸி. பந்துவீச்சை எவ்வித சிக்கலும் இன்றி எதிர்கொண்டது. விஜய் 131 பந்துகளில் தனது அரை சதத்தை எட்டினார். கோலி 69 பந்துகளில் அரை சதம் கடந்தார். தேநீர் இடைவேளை வரை சிறப்பாக ஆடிவந்துள்ள இருவரும் பார்ட்னர்ஷிப்பில் இதுவரை 148 ரன்களை குவித்துள்ளனர். வெற்றிக்கு இன்னும் 159 ரன்களே தேவை என்ற நிலையில், 37 ஓவர்கள் மீதம் உள்ளன.

தொடர்ந்து இந்த இணை இதுபோலவே ஆடிவரும் பட்சத்தில், கண்டிப்பாக இந்தியா ஒரு சாதனை வெற்றியைப் பெறும்.

சர்ச்சைக்குரிய நடுவர் முடிவு

ஜான்சன் வீசிய 5-வது ஓவரில், ஷிகர் தவான் 9 ரன்கள் எடுத்திருந்த போது வெளியேறினார். பவுன்சராக வீசப்பட்ட அந்த பந்து, தவானின் தோளை உரசி சென்றதாக ரீப்ளேயில் தெரியவந்தது. விக்கெட் கீப்பர் ஹாட்டினும் உற்சாகமாக அப்பீல் செய்யவில்லை என்றாலும், ஜான்சன் நம்பிக்கையாகக் கேட்க, நடுவர் ஷிகர் தவான் ஆட்டமிழந்ததாக விரலை உயர்த்தினார். சர்ச்சைக்குரிய இந்த முடிவு, தவானுக்கும், இந்திய அணிக்கும் பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

இதே போல ஆஸி. சுழற்பந்து வீச்சாளர் லயானின் வீசிய பந்தை எதிர்கொண்ட முரளி விஜய், அதை காலில் வாங்கினார். எல்பிடபிள்யூவுக்கு அப்பீல் செய்த லயானின் அப்பீலை நடுவர் நிராகரித்தார். ஆனால் ரீப்ளேவில், அந்த பந்து ஸ்டம்பை தாக்கும் எனத் தெரிந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

6 days ago

விளையாட்டு

6 days ago

மேலும்