சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் ஆடவர் தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் முன்னேறிய 3-வது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னர் இந்தியாவின் பிரகாஷ் படுகோன் முதலிடத்தையும், இந்திய அணியின் தற்போதைய பயிற்சி யாளர் கோபிசந்த் 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர். சீன ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தோடு, ஹாங்காங் மற்றும் துபாய் ஓபன் போட்டிகளில் அரையிறுதி வரை முன்னேறினார் ஸ்ரீகாந்த். இதன்மூலம் அவர் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீகாந்த் கூறுகையில், “இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏறக்குறைய 45-வது இடத்தில் இருந்தேன். அதனால் இந்த ஆண்டில் 4-வது இடத்துக்கு முன்னேறுவேன் என எதிர்பார்க்க வில்லை. வரும் சீசனிலும் சிறப்பாக செயல்படுவதை எதிர்நோக்கியுள்ளேன். வரும் ஆண்டு 2016 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவதற் கான ஆண்டாகும்” என்றார்.
பயிற்சியாளர் கோபிசந்த் கூறுகையில், “காஷ்யப் 6-வது இடத்துக்கு முன்னேறியிருந்தார். நான் 4-வது இடத்துக்கு முன்னேறினேன். இப்போது ஸ்ரீகாந்த் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இது மிகப்பெரிய சாதனையாகும். பிரகாஷ் படுகோன் முதலிடத்தைப் பிடித்தவர். ஆனால் அது அதிகாரப்பூர்வ தரவரிசையா என்பது எனக்கு தெரியாது” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
6 days ago
விளையாட்டு
6 days ago