கடந்த 20 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடிய அணிகளில் இந்திய அணியே ஆஸ்திரேலியாவுக்கு கடும் சவாலாக திகழ்ந்துள்ளது.
அதாவது, இந்த 20 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்விகளை விட வெற்றிகளை அதிகம் இந்திய அணியே பெற்றுள்ளது. 20 ஆண்டுகளில் இந்தியா 16 டெஸ்ட் போட்டிகளில் வென்று 14 போட்டிகளில் மட்டும் தோல்வி கண்டுள்ளது.
இங்கிலாந்து 16 டெஸ்ட் வெற்றிகளை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெற்றிருந்தாலும், 30 போட்டிகளில் இந்தக் காலக்கட்டத்தில் தோற்றுள்ளது.
2000ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியா அணி ஸ்டீவ், வாஹ், ரிக்கி பாண்டிங் தலைமையில் வீழ்த்த முடியாத அணியாக இருந்த போதிலும் இந்தியா, அந்த அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியுள்ளது. அதாவது வீழ்த்த முடியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 டெஸ்ட் வெற்றிகளையும் 9 டெஸ்ட் தோல்விகளையும் இந்தியா பெற்றுள்ளது.
1999-2010 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் வாஹ்-பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலியா ஆடிய போது இந்தியா 24 டெஸ்ட் போட்டிகளில் 9-ல் வென்று 9-ல் தோல்வி கண்டுள்ளது. 6 போட்டிகள் டிரா.
மாறாக இங்கிலாந்து 29 டெஸ்ட் போட்டிகளில் 8-ல் வென்று 16-ல் தோல்வி அடைந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி 18 டெஸ்ட் போட்டிகளில் 4-ல் வென்று 13-ல் தோல்வி தழுவியுள்ளது. மற்ற அணிகள் பக்கத்தில் கூட நிற்க முடியவில்லை.
கடைசி 10 ஆண்டுகள் கணக்கில் கூட 2004ஆம் ஆண்டு முதல் நாளைய டெஸ்ட் தொடங்கும் வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 10 டெஸ்டில் வென்று 8 டெஸ்ட்களில் மட்டுமே தோல்வி கண்டுள்ளது.
ஆனால், ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக இந்தியாவின் வெற்றி விகிதம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. 1999-2010 ஆண்டுகளிடையே, அதாவது வாஹ்-பாண்டிங் கேப்டன்சி காலக்கட்டத்தில், 11 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவில் விளையாடிய இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதாவது கங்குலி தலைமையில் அடிலெய்டில் பெற்ற வெற்றி பிறகு கும்ளே தலைமையில் பெர்த்தில் பெற்ற வெற்றி. 6 டெஸ்ட் போட்டிகளில் தோற்று 3-ல் டிரா செய்துள்ளது இந்தியா.
ஆனால் மற்ற அணிகளும் பெரிதாக இங்கு சோபிக்கவில்லை. நியூசிலாந்து 7-ல் விளையாடி 4-ல் தோல்வியடைந்து 3-ல் டிரா செய்துள்ளது. தென் ஆப்பிரிக்காவும் வாஹ்-பாண்டிங் காலக்கட்டத்தில் 9 போட்டிகளில் 2-ல் மட்டுமே வென்று 6-ல் தோற்றுள்ளது. இங்கிலாந்து கொஞ்சம் பரவாயில்லை: 14 டெஸ்ட்களில் 3-ல் வென்றுள்ளது. ஆனால், 10-ல் தோல்வி கண்டது.
ஆஸ்திரேலியா அணி உச்சத்தில் இருக்கும் போது இந்திய அணியே அந்த அணிக்கு சவாலாக திகழ்ந்துள்ளது என்பதை புள்ளிவிவரங்கள் தெள்ளத் தெளிவாக கூறுகின்றன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago