சென்னை ஓபன் செஸ்: 30-ம் தேதி தொடக்கம்

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பில் 7-வது சென்னை சர்வதேச ஓபன் கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி வரும் 30-ம் தேதி முதல் ஜனவரி 6-ம் தேதி வரை சென்னை நேரு மைதானத்தில் நடை பெறவுள்ளது.

இந்தப் போட்டி ஏ, பி, சி என 3 பிரிவுகளில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளுக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.14 லட்சமாகும். ஏ பிரிவு போட்டிக்கு ரூ.10.5 லட்சமும், பி பிரிவு போட்டிக்கு ரூ.2.5 லட்சமும், சி பிரிவு போட்டிக்கு ரூ.1.5 லட்சமும் பரிசுத் தொகையாகும். ஏ பிரிவு போட்டியில் 14 கிராண்ட்மாஸ்டர்கள், 22 இண்டர்நேஷனல் மாஸ்டர்கள் உள்பட மொத்தம் 140 பேர் பங்கேற்கிறார்கள்.

இந்தப் போட்டியின் தரவரிசையில் இத்தாலி கிராண்ட்மாஸ்டர் ஆல்பர்ட்டோ டேவிட் (இஎல்ஓ ரேட்டிங் 2,578) முதலிடத்தில் உள்ளார். இண்டர்நேஷனல் ரேட்டிங் 1,900 அல்லது அதற்கு மேல் வைத்திருப்பவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க தகுதியுடையவர்கள்.

பி பிரிவு போட்டி ஓபன் ஃபிடே ரேட்டிங் போட்டியாகும். இதற்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. சி பிரிவு போட்டி 1599 அல்லது அதற்கு கீழ் உள்ள ரேட்டிங் வீரர்களுக்கானது.

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 044-25384477 என்ற எண்ணிலோ, tnchesstmt@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம். >www.tamilchess.com என்ற இணைய தளத்தின் மூலமாகவும் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

6 days ago

விளையாட்டு

6 days ago

மேலும்