ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் வால்மீகி சகோதரர்களான யுவராஜ், தேவிந்தர் மற்றும் இவர்களின் உறவினரான அனுப் அமர்பால் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள் களமிறங்கவுள்ளனர்.
2015 ஹாக்கி இந்தியா லீக் போட்டி, ஜனவரி 22 முதல் பிப்ரவரி 22 வரை நடக்கவுள்ளது. இதில் கலந்துகொள்ளும் வால்மீகி சகோதரர்களில் ஒருவரான முன்கள வீரர் யுவராஜ், டெல்லி வேவ்ரைடர்ஸ் அணிக்காக ஆடுகிறார். அவருடைய சகோதரர் தேவிந்தர், கலிங்கா லான்சர்ஸுக்கும், இவர்களின் உறவினர் அமர்பால், டபாங் மும்பை அணிக்கும் ஆடுகிறார்கள்.
“முதல்முறையாக நாங்கள் 3 பேரும் இந்தப் போட்டியில் ஆடவுள்ளோம். சிறுவயது முதல் நாங்கள் ஒன்றாக ஆடிவருகிறோம். இந்தியாவுக்காக ஒன்றாக ஆடுவது எங்கள் கனவு” என்கிறார் 23 வயது யுவராஜ். அவர், ஹாக்கி வேர்ல்ட் லீக் பைனல்ஸ் 2014, 2012 ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டி, 2012 சாம்பியன்ஸ் டிராபி, 2012 சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை, 2011 ஏசியன் சாம்பியன்ஸ் டிராபி என ஏராளமான சர்வதேசப் போட்டிகளில் ஆடியுள்ளார். ஹாக்கி இந்தியா லீகின் நடப்பு சாம்பியனான டெல்லி வேவ்ரைடர்ஸ் அணிக்காக கடந்த முறை 5 கோல்களை அடித்தார் யுவராஜ்.
கலிங்கா லான்சர்ஸ் அணிக்காக கடந்த முறை ஆடிய நடுகள வீரரான தேவிந்தர் அசத்தலாக ஆடினார். முன்கள வீரரான அமர்பால், ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் முதல்முறையாக களம் காண்கிறார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
33 mins ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago