டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு அறிவித்ததையடுத்து பல முன்னாள், இந்நாள் வீரர்கள் ட்விட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி செவ்வாய்க்கிழமை ஓய்வு அறிவித்தார். 3 வடிவங்களிலும் விளையாடுவது கடினமாக இருப்பதாக அவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சில முன்னாள் வீரர்கள் தோனியின் இந்த முடிவு குறித்து தெரிவித்த கருத்துகள் வருமாறு:
சச்சின் டெண்டுல்கர்: வெல் டன்! டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமான பங்களிப்பு. சேர்ந்து விளையாடியதை எப்போதும் மகிழ்ச்சியுடன் நினைத்துப் பார்க்கிறேன். அடுத்த இலக்கு 2015 உலகக் கோப்பைதான் மை பிரெண்ட்.
"மிகவும் சவாலான, போட்டி மனோபாவம் உள்ள மனிதர். இந்திய கிரிக்கெட் அவருக்கு நிறைய கடன் பட்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்” என்று
ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சுரேஷ் ரெய்னா: “தலைமையாற்றும் போதும் துணிவு, ஓய்வு பெறும் போதும் துணிவு. ரெஸ்பெக்ட் தோனி.” என்று ட்வீட் செய்துள்ளார்.
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான்: அவர் ஆட்டத்தை விளையாடும் விதம் எனக்கு மிகவும் பிடித்தமானது. ஆனால் இந்திய டெஸ்ட் அணியை விராட் கோலி வழிநடத்தி புதிய பாதைக்கு இட்டுச் செல்ல இதுவே சரியான நேரம்.
இலங்கை முன்னாள் வீரர் ரசல் ஆர்னால்ட்: புத்தாண்டு பிறக்கும் போது இந்தியாவுக்கு புதிய யுகம் ஆரம்பிக்கிறது. எனக்கு இன்னமும் ஆச்சரியம் விலகவில்லை. ஆனால் சரியான முடிவு. வெல் டன் எம்.எஸ்.டி.
வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே: எந்த கோணத்தில் பார்த்தாலும், அருமையான ஒரு கிரிக்கெட் கரியர் அவருடையது. அவருக்கு பலமான வடிவங்களில் விளையாட அவர் முடிவெடுத்துள்ளார்.
வினய் குமார்: உங்களது கிரிக்கெட் பயணத்திற்கு வாழ்த்துக்கள். உங்கள் இன்மை நிச்சயம் உணரப்படும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago