ஹஷிம் ஆம்லாவை சாதுரியமாக வீழ்த்தியது பற்றி அஸ்வின் பெருமிதம்

By செய்திப்பிரிவு

கிரிக்கெட் ஆட்டத்தில் பீல்டிங் அமைப்பதில் பலவிதங்கள் உள்ளன, பேட்ஸ்மெனுக்கு பலவீனமான ஷாட் எது என்று தெரிந்து கொண்டு அதனை அவரை ஆடச்செய்யுமாறு வீசுவது.

மற்றொரு விதம் அருகருகே பீல்டர்களை நிறுத்தி பேட்ஸ்மெனை வித்தியாசமாக ஏதாவது செய்ய வைத்து வீழ்த்துவது. இல்லையெனில் ரன்கள் எடுக்கும் ஆர்வமுடைய பேட்ஸ்மெனை ரன்கள் கொடுக்காத வண்ணம் பீல்ட் செட் செய்து வெறுப்பேற்றி வீழ்த்துவது. என்று சாதுரியத்தில் பலவகைகள் உள்ளன.

ஆனால் ‘இப்படியா பீல்ட் அமைப்பது? நிச்சயம் இதில் பவுலருக்கு பயன் இருக்காது’ என்று பேட்ஸ்மெனையே நினைக்க வைத்து ஏமாற்றி வீழ்த்துவது. அவர் எதை விளையாட்டுத் தனமான வியூகம் என்று நினைக்கிறாரோ அது உண்மையில் அவருக்கு விரிக்கப்பட்ட வலையாகும்.

இந்நிலையில், பிசிசிஐ டிவி-க்கு நேர்காணல் அளித்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், 2014, ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர் ஆம்லாவை வீழ்த்தியது பற்றி விதந்தோதியுள்ளார்:

"அந்த மைதானத்தில் பக்கவாட்டு பவுண்டரிகளின் தூரம் அதிகம். எனவே என்னை ஸ்வீப் செய்து பவுண்டரி அனுப்புவது கடினம். எனவே நான் ரவுண்ட் த விக்கெட்டில் வந்து லெக் ஸ்டம்ப் திசையில் கேரம் பந்துகளை வீச முடிவு செய்தேன். ஏனெனில் பந்து சுழலும் திசைக்கு எதிர்த்திசையில் ஷாட் ஆடுவது பெரிய ரிஸ்க் ஆகும்.

இந்த உத்தி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பயனளிக்கவே, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் அதனை முயன்றேன். ஹஷிம் ஆம்லா கிரீஸில் இருந்த போது பவர் பிளேயின் போது பந்து வீச வந்தேன். ஸ்கொயர் லெக், மிட்விக்கெட் பீல்டர்களை பின்னால் தள்ளி நிறுத்தினேன். அவர் மேலேறி வந்து அடித்தாலோ அல்லது ஒதுங்கிக் கொண்டு தூக்கி அடிக்க முயன்றால் அதிர்ஷ்டத்தை அவர் நம்ப வேண்டியதுதான்.

அல்லது லெக் ஸ்டம்ப் திசையில் வீசுவதால் ஆம்லா வைட் பந்தாக செல்லும் என்று நினைத்தாலும் நான் அதே திசையில் வீசவே முடிவெடுத்தேன். அப்படித்தான் வீசினேன் அவரும் எதிர்பார்த்தது போலவே வைடு பந்தை ஆடாமல் விட்டார். நான் உடனே கொஞ்சம் உள்ளே, அதாவது எதிர்முனை பவுலரின் காலடித்தடத்தில் பிட்ச் செய்யலாம் என்று உத்தேசித்து வீசினேன். அவரோ இதுவும் வைடுதான் என்று நினைத்தார் ஆனால் பந்து பவுல்டு ஆனது.

இது ஒரு தருணம்தான், ஆனால் இப்படி செய்யப்போய் பேட்ஸ்மெனை ஏமாற்றி வீழ்த்த நினைத்து நான் முட்டாளான தருணங்கள் அதிகம்.” என்றார் அஸ்வின்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்