முதல் டெஸ்டில் கிளார்க் ஆடுவார்: பிராட் ஹேடின் நம்பிக்கை

அடிலெய்டில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் விளையாடுவார் என அந்த அணியின் விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் நம்பிக்கை தெரிவித்துள் ளார்.

பிலிப் ஹியூஸின் மரணத்தால் மனமுடைந்துபோன ஆஸ்திரேலிய வீரர்கள் கடந்த இரு நாட்களாக முதல் டெஸ்ட் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஹேடின் கூறியதாவது:

நாங்கள் மீண்டும் கிரிக் கெட்டுக்கு திரும்பிவிட்டோம். கடந்த இரண்டு வாரங்களாக நடந் ததைப் பற்றி சிந்தித்து எங்களை குழப்பிக்கொள்ள மாட்டோம். பயிற்சியினால் எங்கள் கால்களில் வலி ஏற்படுவதை விரும்பினோம். அது இப்போது கிடைத்துள்ளது. டெஸ்ட் ஆரம்பித்துவிட்டால் நாங்கள் எங்களுடைய இயல் பான நிலைக்குத் திரும்பிவிடு வோம். டெஸ்ட் ஆரம்பித்தால் என்ன ஆகும் என்று யாரும் எண்ண வேண்டாம். நிச்சயம் செவ்வாய்க் கிழமை டெஸ்ட் கிரிக்கெட்டை காணவிருக்கிறீர்கள். உங்களைப் போலவே எங்களுக்கும் அது மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். ஆஸ்திரேலிய ரசிகர்கள் மட்டு மில்லாமல் அனைவருடைய ஆதரவும் எங்களுக்குத் தேவை.

அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணிக்குத் தலைமை தாங்குவது பற்றி நான் யோசிக்கவில்லை. மைக்கேல் கிளார்க் இன்று நன்றாக பயிற்சி மேற்கொண்டார். அவர் எங்கள் அணிக்கு மிகவும் பலமாக இருக்கிறார். அவர் அடிலெய்டில் ஆடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. எங்கள் கேப்டன் அடிலெய்டில் ஆஸ்தி ரேலிய அணிக்குத் தலைமை வகிப்பதையே நாங்கள் விரும்புகிறோம் என்றார்.

ஊடகப் பணியில் ஜான்சன்

முதல் டெஸ்ட் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து மைக்கேல் கிளார்க் விடுவிக்கப்பட்டுள்ளார். கிளார்க் கிற்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்