அதிக ஸ்டம்பிங்குகள்: தோனியின் உலக சாதனை

By பிடிஐ

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாள் ஆட்டத்தின் போது மிட்செல் ஜான்சனை ஸ்டம்பிங் செய்து வெளியேற்றியதன் மூலம் 134 ஸ்டம்பிங்குகளுடன் தோனி உலக சாதனை புரிந்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 38, ஒருநாள் கிரிக்கெட்டில் 85, டி20 கிரிக்கெட்டில் 11 ஸ்டம்பிங்குகள் செய்து மொத்தம் 134 ஸ்டம்பிங்குகளுடன் இலங்கையின் குமார் சங்கக்காரா சாதனையை முறியடித்தார் தோனி.

சங்கக்காரா 133 ஸ்டம்பிங்குகளை மொத்தம் 485 இன்னிங்ஸ்களில் நிகழ்த்த, தோனியோ 460 இன்னிங்ஸ்களில் அந்த சாதனையைக் கடந்தார்.

இன்று, அஸ்வின் வீசிய பந்தை நன்றாக மேலேறி வந்து ஆட முயன்று மிட்செல் ஜான்சன் பந்தைக் கோட்டைவிட தோனி சுலபமாக ஸ்டம்ப்டு செய்தார். இது இவரது 134-வது சாதனை ஸ்டம்பிங்காக அமைந்தது.

அதிக ஸ்டம்பிங்குகள் பட்டியலில் இலங்கையின் ரொமேஷ் கலுவிதரன 101 ஸ்டம்பிங்குகளுடன் 3ஆம் இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய விக்கெட் கீப்பர் நயன் மோங்கியா 52 ஸ்டம்பிங்குகளுடன் 10-வது இடத்தில் உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

6 days ago

விளையாட்டு

6 days ago

மேலும்