சென்னை லீக் கால்பந்து: ஏஜிஓ த்ரில் வெற்றி - 2-1 என்ற கோல் கணக்கில் சுங்கத் துறையை வீழ்த்தியது

By ஏ.வி.பெருமாள்

சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் ஏஜிஓஆர்சி அணி (தலைமைக் கணக்காளர் மனமகிழ் மன்றம்) 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை சுங்க வரித்துறை அணியைத் தோற்கடித்தது.

முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் 0-1 என்ற கோல் கணக்கில் ஏஜிஓ அணி பின்தங்கியிருந்த நிலையில், 2-வது பாதி ஆட்டத்தில் அந்த அணிக்கு ஸ்டிரைக்கர் ரீகனும், மிட்பீல்டர் வினோத்குமாரும் கோலடித்து வெற்றி தேடித்தந்தனர்.

செயின்ட் ஜோசப்-சென்னை கால்பந்து சங்கம் ஆகியவற்றின் சார்பில் சென்னை லீக் கால்பந்து போட்டிகள் சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற போட்டியில் ஏஜிஓ அணியும், சென்னை சுங்க வரித்துறை அணியும் மோதின. ஆரம்பம் முதலே இரு அணிகளும் அபாரமாக ஆடின. எனினும் ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் பந்தைக் கைப்பற்றிய சுங்கத் துறை வீரர் பாரதி ராஜா, அசத்தலாக முன்னோக்கி எடுத்துச் சென்று மிட்பீல்டில் இருந்து கோலடித்தார்.

இதன்பிறகு ஏஜிஓ அணி கோலடிக்க போராடியபோதும், முதல் பாதி ஆட்டம் முடியும் வரை யில் கோல் எதுவும் விழவில்லை.

ஏஜிஓ ஆதிக்கம்

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஏஜிஓ அணியின் ஆட்டத்தில் அனல் பறந்தது. அதேநேரத்தில் சுங்க வரித்துறை அணியின் ஆட்டம் முதல் பாதி ஆட்டத்தில் இருந்த அளவுக்கு ஆக்ரோஷமாக இல்லை. 2-வது பாதி ஆட்டம் தொடங்கிய 7-வது நிமிடத்தில் (அதாவது 52-வது நிமிடம்) ஸ்கோரை சமன் செய்தார் ரீகன். வலது மிட்பீல்டில் இருந்து பந்தை அற்புதமாகக் கடத்தி வந்த சுதாகர், “30 யார்ட் தூரத்தில் இருந்த ஸ்டிரைக்கர் ரீகனிடம் “பாஸ்” செய்தார். அதை சரியாகப் பயன்படுத்திய ரீகன், மேலும் 5 அடி முன்னோக்கி எடுத்துச் சென்று நேரடியாக கோல் கம்பத்திற்குள் அடித்தார்.

சதீஷ்குமாருக்கு ரெட்கார்டு

இதன்பிறகு ஆட்டம் முற்றிலும் ஏஜிஓ வசமானது. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஏஜிஓ அணிக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை அந்த அணியின் செரீன் வீணடித்தார். ஆட்டத்தின் 77-வது நிமிடத்தில் சுங்கத் துறை மிட்பீல்டர் எம்.சதீஷ்குமாருக்கு நடுவர் 2-வது முறையாக “யெல்லோ கார்ட்” (2 யெல்லோ கார்டு பெற்றால் அது ரெட்கார்டாக கணக்கில் கொள்ளப்படும்) காண்பிக்க, அவர் போட்டியிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த அணி 10 வீரர்களுடன் விளையாடியது.

இதன்பிறகு ரீகன் அடித்த சில நல்ல ஷாட்களை சுங்கத் துறை கோல் கீப்பர் “சேவ்” செய்த நிலையில், ஏஜிஓ அணிக்கு கிடைத்த மற்றொரு நல்ல கோல் வாய்ப்பில் கோல் கம்பத்தின் அருகில் வரை பந்தை கொண்டு சென்று வீணடித்தார் மெர்பின்.

கடைசிக் கட்டத்தில் சுங்கத் துறை அணி ஒரு சில பந்துகளை எதிரணியின் கோல் கம்பத்திற்கு கொண்டு சென்றாலும், ஏஜிஓ தடுப்பாட்டக்காரர் நவீன் குமார் சூப்பராக தலையால் முட்டி பந்தை எதிர்முனைக்கு விரட்டினார். இஞ்சுரி நேரத்தில் (90+2) வலது எல்லையில் இருந்த ஸ்டெஜின் கோல் கம்பத்தை நோக்கி பந்தை அடிக்க, அதை தடுப்பதற்காக சுங்கத் துறை கோல் கீப்பர் வெளியில் வந்தார். அப்போது கோல் ஏரியாவில் இருந்த வினோத் குமார் கோலடிக்க, ஏஜிஓ 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

முன்னதாக நடைபெற்ற முதல் டிவிசன் லீக் போட்டியில் நேதாஜி ஸ்போர்ட் கிளப்-மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனிட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இன்றைய ஆட்டங்கள்

சீனியர் டிவிசன் லீக்: தமிழ்நாடு போலீஸ்-சாய் - நேரம்: மாலை 4.15

முதல் டிவிசன் லீக்: ஸ்டார் ஜுவனைல்-எஸ்பிஐ - நேரம்: பிற்பகல் 2.30

இடம்: நேரு மைதானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்