3-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவை நசுக்கியது ஆஸ்திரேலியா

கான்பெராவில் இன்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்று முன்னிலை பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய வெற்றியில் 4 வீரர்களின் பங்களிப்பு முக்கியமாக அமைந்தது. ஃபின்ச் சதம் எடுக்க, ஸ்டீவன் ஸ்மித் முழுதும் புதிதான ஸ்ட்ரோக்குகளுடன் 55 பந்துகளில் 73 ரன்கள் விளாச, பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹாசில்வுட் ஆகியோர் பிரமாதப்படுத்தினர்.

தென் ஆப்பிரிக்க அணியில் ஹஷிம் ஆம்லா மட்டுமே சிறப்பாக ஆடி சதம் எடுத்தார். ஆனால் அந்தச் சதம் வீணானது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 44.3 ஓவர்களில் 256 ரன்களுக்குச் சுருண்டனர். 27-வது ஓவரில் 143/1 என்ற நிலையிலிருந்து அடுத்த 17 ஓவர்களில் மேலும் 113 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தோல்வி கண்டது தென் ஆப்பிரிக்கா.

டாஸ் வென்ற பெய்லி, பேட்டிங்கிற்கு சாதகமான ஆட்டக்களத்தில் சரியாக பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

330 ரன்கள் இலக்கு ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு, பீல்டிங்கிற்கு எதிராக எந்த அணியினாலும், குறிப்பாக ஆஸ்திரேலிய மைதானத்தில் துரத்தப்படுவது என்பது கடினம்.

மேலும், மிட்செல் ஸ்டார்க் பந்துகள் நன்றாக ரிவர்ஸ் ஸ்விங் ஆயின. ஹாசில்வுட் பழைய பந்தில் அபாரமாக வீசினார். இருவரது பந்து வீச்சினாலும், டிவிலியர்ஸ் ஆட்டமிழந்த பிறகு, தென் ஆப்பிரிக்கா கடைசி 6 விக்கெட்டுகளை 32 ரன்களில் இழந்தது. இம்ரான் தாஹிர் காயம் காரணமாக களமிறங்கவில்லை.

ஆம்லா 115 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து ஹாசில்வுட்டின் அபார பந்துக்கு பவுல்டு ஆனார். ஆம்லா 5-வது விக்கெட்டாக அவுட் ஆகும் போது ஸ்கோர் 226 என்று இருந்தது.

தொடக்கத்தில் குவிண்டன் டி காக் (47, 53 பந்துகள், 4 பவுண்டரிகள் ஒரு சிக்சர்) ஆம்லா ஆகியோர் 18 ஓவர்களில் 108 ரன்களைச் சேர்த்தனர். ஹாசில்வுட்டின் முதல் விக்கெட்டாக டி காக் வெளியேறினார். அபாய வீரர் டுபிளேசிஸ் 17 ரன்களில் மிட்செல் மார்ஷிடம் வீழ்ந்தார். ரூசோ 2 ரன்களில் ஸ்டார்க் பந்தில் வெளியேற தென் ஆப்பிரிக்கா 28-வது ஓவரில் 148/3 என்று இருந்தது.

அதன் பிறகு டிவிலியர்ஸ் ஆக்ரோஷம் காட்டினார். ஆம்லா-டிவிலியர்ஸ் ஜோடி 4-வது விக்கெட்டுக்காக 56 பந்துகளில் 76 ரன்களைச் சேர்த்தனர். டிவிலியர்ஸ் 34 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து ரிச்சர்ட்சன் பந்தில் எல்.பி.ஆனார். வாட்சன் பந்தை ஸ்லாக் ஸ்வீப் முறையில் டிவிலியர்ஸ் அடித்த சிக்ஸ் அபாரமானது. இவர் வெளியேறிய பிறகு ஆம்லா உட்பட 32 ரன்களில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் அபாரமாக விளையாடி 118 ரன்களைச் சேர்த்தனர். டேவிட் வார்னர் 50 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சரக்ளுடன் 53 ரன்கள் எடுத்து டிவிலியர்ஸ் கேட்ச் பிடிக்க பிலாண்டரிடம் வீழ்ந்தார். பின்ச் அபாரமாக விளையாடி 9 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 127 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து டிவிலியர்ஸின் லாலிபாப் பந்தில் பவுல்டு ஆனார்.

ஷேன் வாட்சன் சுறுசுறுப்பாக ஒரு 40 ரன்களை எடுத்தார். ஆனால் ஸ்டீவ் ஸ்மித் முழுதும் புதிது புதிதாக ஷாட்களை கண்டுபிடித்து 55 பந்துகளில் 73 ரன்களை எடுத்தார். மிட்செல் மார்ஷ் 13 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.

பந்து வீச்சில் மோர்னி மோர்கெல் 10 ஓவர்களில் அதிகபட்சமாக 84 ரன்களை விட்டுக் கொடுத்தார். பிலாண்டர் 70 ரன்களையும், ஸ்டெய்ன் 53 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர்.

ஆட்ட நாயகனாக ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்