இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் டெல்லி அணி, நார்த்ஈஸ்ட் அணியை 2-1 என்கிற கோல் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.
நேற்று, குவாஹாட்டி இந்திரா காந்தி மைதானத்தில் டெல்லி டைனமோஸ் எஃப்.சி மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்.சி அணிகளுக்கிடையே போட்டி நடந்தது.
ஆட்டம் ஆரம்பித்த 6-வது நிமிடத்தில் டெல்லியின் டாஸ் சண்டோஸ் முதல் கோல் அடித்தார். 14-வது நிமிடத்தில் ஹான்ஸ் முல்டர் 2-வது கோலை அடித்து டெல்லி அணியை வலுவான நிலைமைக்கு கொண்டு சென்றார். ஆனால் 80-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்டை சேர்ந்த கொண்ட்வானி தலையால் முட்டி கோல் அடித்து ஆட்டத்தை பரபரப்பு ஆக்கினார். இன்னொரு கோல் அடித்து சமநிலைக்கு கொண்டு வர நார்த் ஈஸ்ட் போராடியது. 83-வது நிமிடத்தில் இரண்டு அணிகளும் 10 பேருடன் ஆடவேண்டிய நிலைமை ஏற்பட்டது. இறுதியில் டெல்லி 2-1 என்கிற கணக்கில் வெற்றி பெற்றது.
ஆறு புள்ளிகள் தேவை
சென்னையின் எஃப்.சி. 10 ஆட்டங்களில் 19 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. ஆனால் மீதமுள்ள 4 ஆட்டங்களில் 6 புள்ளிகள் எடுக்கவேண்டும் என்று சென்னையின் பயிற்சியாளர் மெட்டாரஸி கூறுகிறார். அவர் மேலும் கூறியதாவது:
“இலானோ காயத்தைக் குணமாக்கிக்கொள்ள பிரேஸில் சென்றுள்ளார். திரும்ப வந்து நிறைய கோல்கள் அடிப்பார் என்று நம்புகிறேன்”என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago