ராஞ்சியில் இன்று கடைசி ஆட்டம்: ஒயிட் வாஷ் முனைப்பில் இந்தியா

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெறுகிறது.

கடந்த 4 போட்டிகளிலும் அபார வெற்றி கண்டு தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, இந்தப் போட்டியிலும் இலங்கையை வீழ்த்தி “ஒயிட் வாஷ்” ஆக்கும் முனைப்பில் களமிறங்குகிறது. உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியிலும் கருணையற்ற வகையில் ஆட விரும்புவதாக கேப்டன் கோலியும் தெரிவித்துள்ளார். அதனால் இந்த ஆட்டத்தை இந்திய அணி எளிதாக எடுத்துக் கொள்ளாது. உச்சக்கட்ட பார்மில் இருக்கும் இந்திய அணிக்கு எதிராக இலங்கை ஆறுதல் வெற்றியைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல.

மிரட்டும் ரோஹித் சர்மா

இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா இலங்கை அணிக்கு பெரும் அச்சுறுத்தலாகத் திகழ்கிறார். கடந்த போட்டியில் 264 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த ரோஹித் சர்மா, இந்த ஆட்டத்திலும் இலங்கை பந்துவீச்சாளர்களை புரட்டியெடுக்க காத்திருக்கிறார். இதுதவிர அஜிங்க்ய ரஹானே, அம்பட்டி ராயுடு, கேப்டன் கோலி, ராபின் உத்தப்பா என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது இந்தியா.

இந்த ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னாவுக்கு ஓய்வளிக்கப்பட்டிருப்பதால் அவருக்குப் பதிலாக கேதார் ஜாதவ் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் உமேஷ் யாதவுக்கு ஓய்வளித்துவிட்டு வினய் குமார் களமிறக்கப்படுவார் என தெரிகிறது. மற்றபடி பந்துவீச்சில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.

தொடர் தோல்விகளால் திக்குமுக்காடிப் போயிருக்கும் இலங்கை அணியால், இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இந்தியாவுக்கு கொஞ்சம்கூட நெருக்கடி கொடுக்க முடியவில்லை. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பலவீனமாக இருக்கும் அந்த அணியில் சுழற்பந்து வீச்சாளர் மென்டிஸ் போன்றவர்களின் வருகைக்குப் பிறகும்கூட எந்த முன்னேற்றமும் இல்லை. மொத்தத்தில் இலங்கை அணி ஆறுதல் வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே.

மைதானம் எப்படி?

போட்டி நடைபெறும் ராஞ்சி மைதானத்தில் ஓரளவு பவுன்சர்கள் எகிறும். நேரம் செல்ல செல்ல மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என மைதான பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார். மாலையில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி பீல்டிங்கையே தேர்வு செய்யும் என தெரிகிறது.

கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெறும் போட்டியில் முதல்முறையாக அவர் இல்லாமல் களமிறங்குகிறது இந்திய அணி. இதுவரை ராஞ்சியில் இந்தியா தோற்றதில்லை. இங்கு இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது இந்தியா. ஒன்றில் வெற்றி கண்டுள்ளது. மற்றொன்றில் மழை காரணமாக முடிவு எட்டப்படவில்லை.

ரெய்னாவுக்கு ஓய்வு

இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியில் சுரேஷ் ரெய்னாவுக்கு ஓய்வளிக்கப்பட்டிருப்பதாக இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “ரெய்னாவுக்கு மட்டுமே ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி கடந்த போட்டியில் விளை யாடிய அனைவரும் கடைசி போட்டியில் விளையாட தயாராக இருக் கிறார்கள். கடந்த போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காத வர்களுக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பளிக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்