இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: முதலிடத்துக்கு முன்னேறியது சென்னை

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. 3-1 என்ற கோல் கணக்கில் புனே சிட்டி எப்.சி. அணியைத் தோற்கடித்தது. இதன்மூலம் 16 புள்ளிகளைப் பெற்ற சென்னை அணி அதிக கோலடித்ததன் அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்தது.

உள்ளூர் ரசிகர்களின் பெரும் ஆதரவோடு ஆரம்பம் முதலே அசத்தலாக ஆடிய சென்னை அணிக்கு 3-வது நிமிடத்தில் கோல் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கோல் கம்பத்தின் அருகில் வரை பந்தை எடுத்துச் சென்ற சென்னை ஸ்டிரைக்கர் மென்டோஸா, கோல் கம்பத்துக்கு மேலே தூக்கியடித்து ஏமாற்றினார்.

வழக்கம்போல் இந்த முறை யும் அசத்தலாக ஆடி சென்னை ரசிகர்களை குஷிப்படுத்திய இலானோ, கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக 16-வது நிமிடத்தில் வெளியேறியது சென்னை அணிக்கு பின்னடை வானது. அவருடைய ஆட்டத் தைக் காண வந்த ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக அமைந்தது. இதன் பிறகு இலானோ இல்லாத குறையை தீர்க்க மென்டோஸா கடுமையாக போராட வேண்டி யிருந்தது. 35-வது நிமிடத்தில் மென்டி கொடுத்த பாஸை கர்மான்ஜோத் கப்ரா வீணடிக்க, முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் கோலடிக்க தீவிரம் காட்டியது சென்னை. 62-வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரரான பல்வந்த் சிங்கிடம் பந்து செல்ல, அவர் மென்டோஸாவுக்கு பாஸ் செய்தார். அப்போது புனே கோல் கீப்பர் முன்னோக்கி வர, அவருக்கு மேலாக பந்தை தூக்கியடித்து அசத்தலாக கோலடித்தார் மென்டோஸா. அப்போது மகிழ்ச்சி பெருக்கில் மைதானத்துக்கு வெளியில் வந்த ரசிகர்களை ரெப்ரி உள்ளே செல்லுமாறு அழைத்தபோது அவரையும் கட்டிப்பிடித்து கொண்டாடினார் கேப்டன் போயன் ஜோர்டிச்.

இதன்பிறகு சென்னை வீரர் ஜெம்பா ஜெம்பா 70-வது நிமிடத்தில் ‘ஓன்’ கோலடிக்க, இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையை எட்டின. ஆனால் அடுத்த சில நொடிகளிலேயே புனேவுக்கு பதிலடி கொடுத்தார் புருனோ. அசத்தலாக அவர் அடித்த கோலால் சென்னை மீண்டும் முன்னிலை பெற்றது. தொடர்ந்து வேகம் காட்டிய சென்னை அணி இஞ்சுரி நேரத்தில் 3-வது கோலை அடித்தது. இந்த கோலை ஜேஜே லால்பெக்குலா அடித்தார். இதன்மூலம் சென்னை அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. முந்தைய 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக டிரா செய்த சென்னை, இந்த ஆட்டத் தில் வெற்றி பெற்றதன் மூலம் 16 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டி யலில் முதலிடத்தைப் பிடித்தது.

ரவ்சன் இர்மாட்டோவ்

இந்தப் போட்டியின் பிரதான நடுவராக இருந்த ரவ்சன் இர்மாட்டோவ் இரு உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் நடுவராக பணிபுரிந்தவர். உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த வரான இவர், தென் ஆப்பிரிக் காவில் 2010-ம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் தொடக்க ஆட்டம், காலிறுதி, அரையிறுதி உள்ளிட்ட 5 போட்டிகளிலும், இந்த ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில் காலிறுதி உள்ளிட்ட 4 ஆட்டங்களிலும் நடுவராக செயல்பட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்