ஆஸ்திரேலியாவுக்குச் சென்று ஹாக்கி டெஸ்ட் தொடரில் வென்ற இந்திய ஹாக்கி அணியிடமிருந்து இந்திய கிரிக்கெட் அணி ஊக்கம் பெற வேண்டும் என்கிறார் அனில் கும்ளே.
சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய ஹாக்கி அணி அங்கு ஆஸ்திரேலியாவை 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்று வீழ்த்தியது.
உலக சாம்பியன் அணியான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய ஹாக்கி அணி அதன் பழைய வெற்றிப்பாதைகளுக்குத் திரும்புவதை அறிவுறுத்தியதாக அமைந்தது.
தற்போது இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் இந்திய ஹாக்கி அணியின் வெற்றியிலிருந்து இந்தியா ஊக்கம் பெற வேண்டும் என்று அனில் கும்ளே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
"இந்திய ஹாக்கி அணி காண்பித்த வழியில் நம் இந்திய கிரிக்கெட் அணி சென்று டெஸ்ட் தொடரில் வெல்லுமா?” என்று அனில் கும்ளே ட்வீட் செய்துள்ளார்.
கிரிக்கெட் வீரர்கள் பலர் ஹாக்கி வீரர்களுக்கு ஊக்கம் அளித்து வரும் காலத்தில் இந்திய ஹாக்கி அணியின் இந்த திடீர் எழுச்சியினால், கிரிக்கெட்/ஹாக்கி படிமுறை ஒரு வலுவான முன்னாள் கிரிக்கெட் வீரர் மூலம் தற்போது தலைகீழாக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதே.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago