27 ஆண்டுகளுக்குப்பின் பைனலுக்கு முன்னேறிய இங்கிலாந்து: முதல் முறையாக அரையிறுதியோடு வெளியேறிய ஆஸி.

By க.போத்திராஜ்

ஜேஸன் ராயின் அதிரடி ஆட்டம், ஆர்ச்சர், வோக்ஸின் துல்லியமான மிரட்டும் பந்துவீச்சு ஆகியவற்றால் பிர்மிங்ஹமில் நேற்று நடந்த உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து பைனலுக்கு தகுதிபெற்றது இங்கிலாந்து அணி.

வரும் ஞாயிற்றுக்கிழமை லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது 224 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து,226 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணியின் ஒட்டுமொத்த உருக்குலைவுக்கு வோக்ஸ், ஆர்ச்சர் இருவரின் பந்துவீச்சுதான் காரணம். தொடக்கத்திலேயே வார்னர், ஹேண்ட்ஸ்கம்ப் விக்கெட்டை சாய்த்த வோக்ஸ்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது

கடந்த 1992-ம் ஆண்டுக்குப்பின் 27 ஆண்டுகளுக்குப்பின், இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. 4-து முறையாக ைபனலுக்கு இங்கிலாந்து அணி முன்னேறுகிறது,  வழக்கத்தைக் காட்டிலும் அதிகமான தகுதிகளுடன் இங்கிலாந்து அணி இருப்பதால் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

1992-ம் ஆண்டு இங்கிலாந்து அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு செல்லும்போது 6 வயதில் கிரிக்கெட் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்த மோர்கன், இன்று அதே இங்கிலாந்து அணியை தனது தலைமையில் இறுதிப்போட்டிக்கு அழைத்து வந்துள்ளார்.

அதேசமயம், கடந்த 1975-ம் ஆண்டில் இதுவரை உலகக்கோப்பை அரையிறுதியில் தோற்காமல் பயணித்த ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக அரையிறுதியோடு வெளியேறியது.

1992-ம் ஆண்டுக்குப்பின், கோப்பை வெல்லாத இரு அணிகள் உலகக்கோப்பை பைனலில் வந்து மோதுவது இதுதான் முதல் முறையாகும்.

கடந்த 27- ஆண்டுகளாக இறுதிப்போட்டியில் விளையாடும இரு அணிகளில் ஏதாவது ஒரு அணி சாம்பியனாக இருந்திருக்கும், முதல்முறையாக பட்டம் வெல்லாத இரு அணிகள் மோதுகின்றன. 1992-ம் ஆண்டு இங்கிலாந்தும், பாகிஸ்தானும் மோதியது குறிப்பிடத்தக்கது

ஆஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை இந்திய அணிக்கு நேர்ந்த அதேகதிதான் நேற்றும் நடந்தது. இங்கிலாந்து ஆடுகளங்களில் தொடக்கத்தில் 10 ஓவர்கள்வரை தொடக்க பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை பறிகொடுக்காமல் நிலைத்துவிட்டால், எதிரணி பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என்ற விஷயத்தை இந்திய அணியும் மறந்துவிட்டது, ஆஸ்திரேலியஅணியும் அதே தவறைச் செய்தது.

 7 ஓவர்களில் 3 விக்கெட்டை பறிகொடுத்து கீழே விழுந்த ஆஸ்திரேலிய அணி கடைசிவரை எழுந்திருக்க முடியவில்லை.

அரையிறுதிபோன்ற அதிக அழுத்தம் கொண்ட போட்டியில் 223 ரன்கள் எனும் குறைந்த இலக்கை புத்திசாலியான எதிரணியினர் ெமன்று, தின்றுவிடுவார்கள். ஆஸ்திரேலியாவின் தகுதிக்கு இதுபோன்ற ஸ்கோர் அரையிறுதியில் தகுதிக்குறைவானதுதான்

இதிலும் இங்கிலாந்து ஆடுகளங்களையும், காலநிலையையும் நன்கு அறிந்த உள்நாட்டு வீரர்களுக்கு இந்த ஸ்கோரை எவ்வாறு விளையாட வேண்டும் என்று தெரிந்து பேட்செய்தார்கள். 10 ஓவர்கள்வரை அடங்கி பேட்செய்த, ஜேஸன் ராய் அடுத்த 10 ஓவர்களில் வெளுத்துக்கட்டினார்.

ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், காரே மட்டும் நேற்று நிலைத்திருக்காவிட்டால் ஆட்டம் ஒருதரப்பான ஆட்டமாகச் சென்றிருக்கும்.

உலகக்கோப்பைப் போட்டி நாக்அவுட் ஆட்டங்களில் தொடர்ந்து 50 ரன்களுக்கு மேல் குவித்த சச்சினின் சாதனையை ஸ்மித் சமன் செய்தார்.  

மற்றவகையில் ேநற்று ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறப்பாக சொல்லும் அளவுக்கு இல்லை.

இதுவரை உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதில் ஆஸி. முன்னாள் வீரர் மெக்ராத் 26 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்தார், அதைமுறியடித்த ஸ்டார்க் நேற்று தனது 27-வது விக்கெட்ைட வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் தாங்கள் சாம்பியன் பட்டம் வெல்லத் தகுதியானவர்கள் என்பதை நிரூபித்துவிட்டனர்.

தொடக்கத்திலேயே ஆர்ச்சரின் ஆக்ரோஷமான வேகப்பந்துவீச்சு, வோக்ஸின் ஸ்விங் பந்துவீச்சு இரண்டும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்துவிட்டது. ஆர்ச்சர் வீசிய பவுன்ஸரில் காரேயின் தாடை கிழிந்து ரத்தம்சொட்டியது.

ஆர்ச்சர் நேற்று 10 ஓவர்கள் வீசி 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது ஓவர்களில் ஒரேஒரு பவுண்டரி மட்டுமே நேற்று விட்டுக்கொடுத்துள்ளார்.

அதோபோல வோக்ஸ் 8ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பந்துவீச்சில் இங்கிலாந்து அணியினர் கடும் நெருக்கடி அளித்ததால் ரன்குவிக்க ஆஸ்திரேலிய வீரர்கள் மிகுந்த சிரமப்பட்டார்கள்.

நியூஸிலாந்துக்கு எதிரான இறுதிஆட்டத்தில் நிச்சயம் ஆர்ச்சர், வோக்ஸ் வேகத்தில் பெரிய சரிவு ஏற்படப்போகிறது.

பேட்டிங்கில் ஜேஸன் ராய், பேர்ஸ்டோ கூட்டணி சூழல் அறிந்து, ஆடுகளத்தின் தன்மை அறிந்து பேட் செய்தார்கள். 10 ஓவர்களில் தொடக்க விக்கெட்டுகளை கழற்ற முடியவில்லை என்று தெரிந்தபோதே ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் மனம்தளர்ந்து விட்டனர்.

களத்தில் நங்கூரமிட்ட ஜேஸன் ராய் 11-வது ஓவர்கள் முதல் தனது காட்டடிக்கு மாறி, ஸ்கோரை உயர்த்திவிட்டார். முதல் 10 ஓவர்களில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் சேர்த்தநிலையில் அடுத்த 10 ஓவர்களில் 97 ரன்கள் சேர்த்தது.

50 பந்துகளில் ஜேஸன் ராய் அரைசதம் அடித்தார். ஸ்டார்க் பந்துவீச்சில் பேர்ஸ்டோ 34 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 124 ரன்கள் சேர்த்துப்பிரிந்தனர்

ேஜஸன் ராய், பேர்ஸ்டோ பேட்டிங் இங்கிலாந்து அணி்க்கு மிகப்பெரிய பலம், அதைக்காட்டிலும், தொடக்கத்தில் இருந்து அட்டாக்கிங் கேமே கையில் எடுத்துவிளையாடும் நிலைப்பாடு நன்றாக கை கொடுத்துவருகிறது.

கடந்த 1996-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் இலங்கை வீரர்கள் கலுவிதராணா, ஜெய்சூர்யா கூட்டணி பேசப்பட்டதுபோல், இவர்கள் இருவரும் பேசப்படுகிறார்கள்.

அதிரடியாக ஆடிய ஜேஸன் ராய், ஸ்மித் வீசிய ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து ஸ்கோரை ராக்கெட் வேகத்துக்கு உயர்த்தினார். 65 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்து ராய் ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கும்.

ஜோ ரூட் களமிறங்கிய அடுத்த பந்தில் இருந்து ஸ்டார்க் பந்தில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்தது முத்தாய்ப்பாகும். மோர்கன்(45) ரூட்(49) இருவரும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர்.

107 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ், ஸ்டார்க் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

முன்னதாக டாஸ்வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. ஆர்ச்சர், வோக்ஸின் ஆவேசமான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலைகுலைந்தனர்.

வார்னர்(9), பிஞ்ச்(0), ஹேண்ட்ஸ்கம்ப்(4) என விக்கெட்டுகளை பறிகொடுத்தவுடன் ஆஸ்திரேலியாவின் சரிவு தொடங்கியது. குறிப்பாக ஆர்ச்சரின் துல்லியமான லென்த் பந்துவீச்சையும், பவுண்ஸரையும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களால் ஆட முடியவில்லை.

4-வது விக்கெட்டுக்கு காரே, ஸ்மித் இருவரும் சேர்ந்து அணியைச் சரிவில் இருந்து மீட்டனர். 4-வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்த நிலையில், காரே 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் மேக்ஸ்வெல்(22), ஸ்டானிஸ்(0), கம்மின்ஸ்(6) என விரைவாக வெளியேறினர்.

விக்கெட்டுகள் சரிந்தபோதிலும் நிதானமாக ஆடிய ஸ்மித் 85 ரன்கள் சேர்த்து ரன்அவுட் ஆகினார். ஸ்டார்க் 29 ரன்களில் வெளியேறினார். 49 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலியத் தரப்பில் வோக்ஸ், அதில் ரசித் தலா 3 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்