முதல் பந்திலேயே ரிவியூவை இழந்த இந்திய அணி: நியூஸிலாந்து அணி மந்தமான தொடக்கம்

By செய்திப்பிரிவு

ஓல்ட் ட்ராபர்ட் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை 2019 அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட் செய்து வருகிறது. அளவுக்கு அதிகமான எச்சரிக்கையுடன் ஆடி வந்தாலும் கப்தில் விக்கெட்டை பும்ராவின் வேகத்துக்கு கோலியின் அபார கேட்சுக்கு இழந்தது.

நியூஸிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 9 ஓவர்களில் 23 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் ரன்னே கிட்டத்தட்ட 3வது ஓவர் முடிவில்தான் வந்தது. ஆனால் புவனேஷ்வர் குமார் வீசிய இன்னிங்சின் முதல் பந்திலேயே கப்தில் கால்காப்பில் வாங்க அப்பீல் எழுந்தது, கள நடுவர் அவுட் கொடுக்கவில்லை, இந்தியா ரிவியூ செய்தது, ஆனால் அதிலும் நாட் அவுட் என்றே தீர்ப்பானது. லைவில் லெக் ஸ்டம்பை மிஸ் செய்வது போல் தெரிந்தது, ரிவியூவிலும் அது உறுதியாக நாட் அவுட், இந்திய அணி ரிவியூவை இழந்தது.

 

புவனேஷ்வரின் அந்தப் பந்து உள்ளே வந்து கடைசி நொடியில் லேசாக நேராக வந்தது, அக்ராஸ் த லைனில் ஆடிய கப்தில் பீட்டன் ஆனார்.

 

ஆனால் கப்தில் அதன் பிறகும் ஒன்றும் செய்ய முடியவில்லை 14 பந்துகள் ஆடி 1 ரன்னை எடுத்து பும்ராவின் அருமையான பந்துக்கு கோலியின் அருமையான கேட்சுக்கு வெளியேறினார்.

 

வில்லியம்சன் ஒரு பவுண்டரியுடன் 11 ரன்களுடனும், நிகோல்ஸ் 1 பவுண்டரியுடன் 10 ரன்களிலும் ஆடி வருகின்றனர். முக்கிய கட்டத்தில் ரிவியூ செய்ய வேண்டும் என்று வரும்போது இந்திய அணியினால் ரிவியூ கேட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

பும்ரா 4-1-10-1, புவனேஷ்வர் குமார் 4-1-8-1.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE