35 ரன்களுக்கு ஆட்டமிழந்து ராஜஸ்தான் அணி அதிர்ச்சித் தோல்வி

நாக்பூரில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டியில் ரயில்வே அணியிடம் 35 ரன்களுக்குச் சுருண்டு ராஜஸ்தான் அதிர்ச்சித் தோல்வி தழுவியது.

விஜய் ஹசாரே டிராபிக்கான ஒருநாள் போட்டிகள் மண்டலவாரியாக பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இன்று மத்திய மண்டல பிரிவில் நடைபெற்ற போட்டியில் ரயில்வே அணிக்கு எதிராக 15.3 ஓவர்களில் 35 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ராஜஸ்தான், தொடர்ந்து ஆடிய ரயில்வே அணி 5.3 ஓவர்களில் 39/1 என்று வெற்றி பெற்றது.

உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இது 2-வது ஆகக்குறைந்த ரன் எண்ணிக்கையாகும். சவுராஷ்டிரா அணி மும்பை அணிக்கு எதிராக 1999-2000ஆம் ஆண்டு உள்நாட்டு தொடரில் 34 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி எதிர்மறை சாதனையை தன் வசம் வைத்துள்ளது.

ராஜஸ்தான் அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் பங்கஜ் சிங் கேப்டன், ரயில்வே அணிக்கு எம்.ராவத் கேப்டன். டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது.

ரயில்வே அணியின் புதிய பந்து வேகப்பந்து வீச்சாளர்களான அனுரீத் சிங், மற்றும் அமிட் மிஷ்ரா தலா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஏற்கெனவே விதர்பா, உத்தரப்பிரதேச அணிகளிடமும் ராஜஸ்தான் அணி படு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

பிட்சில் ஒன்றுமில்லை. ஆனால் ராஜஸ்தான் அணியின் பேட்டிங் ஏன் இப்படி சரிவு கண்டது என்பது புரியாத புதிராக உள்ளது. இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒரு முக்கியமான அணி இப்படி சரிவு கண்டது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் அணியின் முதல் 4 பேட்ஸ்மென்கள் சுவல்கா, ஷர்மா, பிஸ்ட் (துலிப் கோப்பையில் கலக்கியவர்), புனீத் யாதவ் ஆகியோர் 0-வில் அவுட் ஆகினர். 11.1 ஓவரில் 17/8 என்று லீக் அணியை விடவும் மோசமாக சரிந்தது ராஜஸ்தான். ஏ.ஆர்.குப்தா 13 ரன்களையும் பின்கள வீரர்கலின் ஒற்றை இலக்க பங்களிப்பும் மிக மோசமான ரன் எண்ணிக்கையிலிருந்து காப்பாற்றியது.

ஒரு ரஞ்சி அணி 35 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனால் அது நம் உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பு பற்றி எதிர்மறையான செய்திகளை அறிவுறுத்துவதாகும். ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும் பிசிசிஐ-யிற்கும் அதிகார மோதல் இருந்து வருகிறது. ராஜஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளிடையேயும் கருத்து மோதல் உச்சத்தில் உள்ள நிலையில் ஒரு சிறந்த உள்நாட்டு அணி, அதிகார மோதலினால் எப்படி சீரழியும் என்பதற்கு ராஜஸ்தானின் இந்த தோல்வி ஒரு உதாரணம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்