தென் அமெரிக்க நாடுகளில் நடத்தப்படும் மிகப்புகழ்பெற்ற, பாரம்பரியம் கொண்ட கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் 12 ஆண்டுகளுக்குப்பின் சாம்பியன் பட்டத்தை பிரேசில் அணி வென்றது.
கோபா அமெரிக்கா கால்பந்து கோப்பையை 9-வது முறையாக பிரேசில் அணி வென்றுள்ளது. இதற்கு முன், 1919, 1922, 1949, 1989, 1997, 1999, 2004, 2007, 2019 ஆகிய ஆண்டுகளில் பிரேசில் அணி கோப்பையை வென்றுள்ளது.
பிரேசில் அணியில் நேற்று முக்கிய வீரர் கேப்ரியல் ஜீஸஸ் டிஸ்மிஸல் ஆகிய வெளியே சென்றபின் 10 வீரர்களுடன் களத்தில் போராடிய பிரேசில் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பெரு அணியை சாய்த்தது.
பிரேசில் அணிக்காக அந்த அணி வீரர்கள் எவர்டன்(15நிமிடம்), கேப்ரியல் ஜீஸஸ்(45-வதுநிமிடம்), ரிகார்லிசன்(90-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். அதேசமயம் பெரு அணிக்கு அந்த அணியின் கேப்டன் பாலோ குரேரியோ மட்டும் கோல் அடித்தார்.
ரியோ டி ஜெனிரோ நகரில் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று நடந்தது. கடந்த 6-ம் தேதி கால்பந்து ஜாம்பவான் ஜாவோ கில்பர்டோ மரணமடைந்ததால் அவருக்கு அஞ்சலி செலுத்த ஒருநிமிடம் வீரர்கள் மவுனமாக இருந்தனர். அதன்பின ஆட்டத்தைத் தொடங்கினர்.
பிரேசில் அணி தனது சொந்த மண்ணில் விளையாடியதால், போட்டியைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருந்தனர். இது பிரேசில் அணிக்கு பெரிய ஊக்கத்தை அளித்தது. அதுமட்டுமல்லாமல் பெரு அணியின் பயிற்சியாளர் ரிகார்டோ கராசியா, கூறுகையில், " எந்த காரணத்தைக் கொண்டும், பிரேசில் அணியை ஆதிக்கம் செய்யவிடக்கூடாது" என்று வீரர்களுக்கு எச்சரித்து இருந்தார். அனைத்தையும் பிரேசில் வீரர்கள் உடைத்துவிட்டனர்
ஆட்டம் தொடங்கியதில் இருந்துபிரேசில் வீரர்களின் கைதான் ஓங்கி இருந்தது. பந்தை பெரு வீரர்களின் கொடுக்காமல், போக்குக்காட்டி நடத்தினார்கள். குறிப்பாக கேப்ரியல் ஜீஸஸ் பந்தை பெரு அணியின் இரு டிபென்டர்களையும் கடந்த கொண்டு சென்ற பந்தை, 15-வது நிமிடத்தில் எவர்டன் அருமையான கோலாக மாற்றினார். இதனால், 15-வது நிமிடத்தில் 1-0 என்று பிரேசில் முன்னிலை பெற்றது.
பிரேசில் அணியினர் சாம்பியனைப் போன்று நேற்று விளையாடி பந்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள்.
ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் பெரு அணியின் கேப்டன் குரேருக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை தவறவிடாமல், கோல் அடித்து 1-1என்ற கணக்கில் சமன் செய்தார்.
இந்த கோல் அடித்த அடுத்த நிமிடத்தில் பிரேசில் அணிக்கு எக்ஸ்ட்ரா நேரத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திய கேப்ரியல் ஜீஸஸ் அருமையான கோல் அடித்து அணியை 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெறச்செய்தார்.
2-வது பாதியிலும் பிரேசில் வீரர்களின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. குறிப்பாக சில்வா டேனி அல்வ்ஸ், கோடின்ஹோ இருவரும் இரு அற்புதமான, ஆகச்சிறந்த ஷாட்களை அடித்தார்கள். ஆனால்,இலக்கு சரியாக அமையததால், கோலின்றி வீணானது. இந்த இரு ஷாட்களும் கோலாக மாறி இருந்தால், பிரேசில் அணியின் வெற்றி பிரமாதமாக இருந்திருக்கும்.
ஆட்டத்தின் 90-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்துத. அந்த அணியின் மாற்று வீரர் ரிகார்லிசன் கோல் அடிக்க பிரேசில் அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. கடைசிவரை பெரு அணி போராடியும் தோல்வியில் முடிந்தது.
9-வது முறையாகவும் , 12 ஆண்டுகளுக்குப்பின் பிரசில் அணி கோபா அமெரி்ககா கோப்பையை வென்றது.
3-வது இடத்துக்கு நடந்த ஆட்டத்தில் சிலி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா 3-வது இடத்தைப் பிடித்தது.
இந்த போட்டித் தொடரில் அதிகபட்சமாக பிரேசில் அணி வீரர் எவர்டன் 3 கோல்கள் அடித்தார். மதிப்பு மிக்க வீரர் விருது பிரேசில் அணியின் டேனிஅல்வ்ஸ்க்கு வழங்கப்பட்டது. சிறந்த கோல் கீப்பருக்கான விருது பிரேசில் கோல்கீப்பர் அலிசனுக்கும், நேர்மையான வீரர் விருது பிரேசில் அணிக்கு வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago