ஐசிசியின் சிறந்த ஒருநாள் போட்டி வீரர் விருதுக்கு கோலியின் பெயர் பரிந்துரை

By செய்திப்பிரிவு

ஐசிசி சார்பில் வழங்கப்படும் ஆண்டின் சிறந்த ஒருநாள் போட்டி வீரருக்கான விருதுக்கு இந்திய வீரர் விராட் கோலியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதே விருதை 2012-ல் கோலி வென்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

கோலி தவிர தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ், தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக், வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் பெயர், ஆண்டின் சிறந்த ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டி வீராங்கனைக்கான விருதுகளுக்கு பரிந் துரைக்கப்பட்டுள்ளது.

ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான கேர்பீல்டு சோபர்ஸ் டிராபி விருதுக்கு டிவில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா), ஜான்சன் (ஆஸ்திரேலியா), மேத்யூஸ் (இலங்கை), சங்ககாரா (இலங்கை) ஆகியோரின் பெயர்களும், ஐசிசி சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு ஜான்சன் (ஆஸ்திரேலியா), மேத்யூஸ் (இலங்கை), சங்ககாரா (இலங்கை), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதுதவிர மேலும் பல்வேறு விருதுகளுக்கு பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் விவரம் வரும் 14-ம் தேதி வெளியாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE