பாரீஸில் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக்

By ஏஎஃப்பி

2028-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை லாஸ் ஏஞ்சலீஸ் நகரம் நடத்த சம்மதம் தெரிவித்துள்ளதால் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பாரீஸ் நகரில் நடைபெறுவது உறுதியாகி உள்ளது.

2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியா நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அடுத்த இரு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமத்தை பெறுவதில் பாரீஸ், லாஸ் ஏஞ்சலீஸ் நகரங்கள் இடையே கடும் போட்டி நிலவியது. கடந்த மாதம் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் நடத்திய பேச்சு வார்த்தையின் போது இந்த நகரங்களில் ஒலிம்பிக் போட்டி நடத்துவது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த லாஸ் ஏஞ்சலீஸ் நகரம் சம்மதம் தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான பணிகளையும் அந்த நகரம் மேற்கொள்ளத் தொடங்கி உள்ளது. இதனால் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பாரீஸ் நகரில் நடைபெறுவது உறுதியாகி உள்ளது. இதுதொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் விரைவில் முறைப்படியான அறிவிப்பை வெளியிடும் என கருதப்படுகிறது.

லாஸ் ஏஞ்சலீஸ் நகர மேயர் எரிக் ஹார்ஷெட்டி கூறும்போது, “ஒலிம்பிக் போட்டிகள் மீண்டும் அமெரிக்காவுக்கு வருகிறது என்பதை அறிவிப்பதில் நான் பெருமை அடைகிறேன். 2028-ல் ஒலிம்பிக் போட்டிகள் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெறும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்