இந்திய கேப்டன் விராட் கோலியிடம் நிறைய ‘ஆஸ்திரேலிய உணர்வு’ (ஸ்பிரிட், மனநிலை, அணுகுமுறை) இருப்பதாகவும் ஆனால் இதற்காக ஆஸ்திரேலிய ஊடகம் விராட் கோலியை ஒருபோதும் புகழ்ந்து எழுதாது என்றும் கூறினார் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்.
ஆஸ்திரேலியச் சுற்றுலாத் துறையை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகாக புனே வந்திருந்த மைக்கேல் கிளார்க் கூறியதாவது:
ஆஸ்திரேலியாவில் விராட் கோலிக்கு அதிக ரசிகர்கள் இல்லை என்பதை நான் ஏற்க மறுக்கிறேன். விராட் கோலியிடன் நிறைய ஆஸ்திரேலிய உணர்வு, மனநிலை, அணுகுமுறை உள்ளது.
உள்ளபடியே கூற வேண்டுமென்றால் அவர் ஆட்டத்தைக் கடினமாக உழைத்து ஆடுகிறார், களத்தில் சவாலாகத் திகழ்கிறார். ஆனால் களத்துக்கு வெளியே அவர் நன்றாகப் பழகக் கூடியவர். எனவே விராட் கோலியை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும் களத்தில் அவர் வெளிப்படுத்துவது அவரது போர்க்குணம் என்பது. எந்த ஒரு ஆஸ்திரேலிய வீரரும் இவ்வாறுதான் இருப்பார்கள், இவ்வாறு இல்லாத ஆஸி. வீரர்கள் இருக்கிறார்களா என்பது சந்தேகமே. எனவே ஆஸ்திரேலியாவில் விராட் கோலிக்கு மரியாதை நிச்சயம் உண்டு.
ஆனாலும் ஒன்றைக் கூறிவிடுகிறேன், இதற்காக விராட் கோலியை பாராட்டி ஆஸ்திரேலிய ஊடகம் ஒருபோதும் எழுதி விடாது. அவர்கள் எதிர்மறைச் செய்திகளையே கோலி பற்றி எழுத விரும்புவார்கள். ஆனால் எனக்கு அவரிடம் பெரிய விதத்தில் உறவு உள்ளது. அவர் மரியாதைக்குரியவர் என்றே நான் மதிப்பிடுகிறேன்.
இவ்வாறு கூறினார் கிளார்க்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago