உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் செர்பியாவின் ஜோகோவிச் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதேவேளையில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா 4-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் கடந்த மாதம் நடைபெற்ற விம்பிள்டன் போட்டியின் போது காயம் அடைந்தார். முழங்கை காயத்துக்கு சிகிச்சை மேற்கொண்டு வரும் அவர், இந்த சீசனில் எஞ்சிய ஆட்டங்களில் விளையாடப் போவதில்லை என ஏற்கெனவே அறிவித்துள்ளார். இதனால் வரும் வாரங்களில் அவர், தரவரிசையில் மேலும் பின்னடைவை சந்திக்கக்கூடும்.
ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ் 3 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தைப் பிடித்துள்ளார். அர்ஜென்டினாவின் லியோனார்டோ மேயர் 89-வது இடங்கள் முன்னேறி 49-வது இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் அவர் ஹம்பர்க் ஓபனில் கோப்பை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஜெர்மனியின் புளோரியன் மேயர் 42 இடங்கள் முன்னேறி 59-வது இடத்தை பிடித்துளளார்.
முதல் 3 இடங்கள்
முதல் 3 இடங்களில் எந்தவித மாற்றமும் இல்லை. இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, ஸ்பெயினின் ரபேல் நடால், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர். வாவ்ரிங்கா ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தைப்பிடித்துள்ளார்.
குரோஷியாவின் மரின் சிலிச், ஆஸ்திரியாவின் டொமினிக் தியம், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ், ஜப்பானின் நிஷி கோரி, கனடாவின் மிலோஸ் ரயோனிக் ஆகியோர் முறையே 6 முதல் 10-வது இடங்களில் உள்ளனர்.
மகளிர் தரவரிசை
மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசைப் பட்டியலில் எந்தவித மாற்றமும் இல்லை. செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, ருமேனியாவின் சிமோனா ஹாலப், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், ஸ்பெயினின் கார்பைன் முகுருசா, உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா ஆகியோர் முறையே முதல் 5 இடங்களில் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago